முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி ; ஆரம்பித்து வைத்தார் சங்கா

இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நட்புறவை பேணும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்ந்தும் 5 ஆவது முறையாக இன்று (21) ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில் நேற்று மாலை மூன்று மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான...

மருந்துப்பொருட்களின் விலையை அரசாங்கம் உடனடியாகக் குறைக்கவேண்டும்!

நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அரச வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றபோதிலும், தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் தமக்கேற்றாற்போல் விலைகளைத் தீர்மானித்து மருந்துகளை விற்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்திக்கின்றனர்....
Ad Widget

பாதிக்கப்பட்ட உங்களைப் பார்க்க ஏன் எதிர்க்கட்சித் தலைவர் வரவில்லை?

கிளிநொச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இதுவரை ஏன் எதிர்க்கட்சித் தலைவர் வரவில்லையென பத்தரமுல்லையைச் சேர்ந்த சீலரத்தின தேரர் கேள்வி கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று கிளிநொச்சி தீவிபத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கு உலர் உணவு வழங்கிவைத்ததன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நான் இனவாதம் பேச வரவில்லை....

கலாசார மத்திய நிலைய கட்டடப் பணிகள் ஆரம்பம்

இந்திய அரசாங்கத்தின் 1.7 பில்லியன் ரூபாய் நிதியுதவியில் அமைக்க தீர்மானிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு அருகில் இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றது. இதனால், புல்லுக்குளத்துக்கு அருகிலுள்ள வீதி மூடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பின்னர் இந்த வீதியானது தனியாக நடைபாதை வீதியாக மாத்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. 600...

நல்லாட்சி அரசாங்கத்துக்கு மூன்று முகங்கள்

நல்லாட்சி எனப்படும் அரசாங்கத்துக்கு மூன்று முகங்கள் இருக்கின்றன. அவற்றைக் காட்டி அந்த அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. இதனை உலகுக்கு காட்டவே எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளதாக யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் அருட்திரு மங்களராஜா தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணி...

அழைப்பு கடிதங்கள் கிடைக்காதவர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

ஆசிரிய பயிற்சி கற்கை நெறிக்கான அழைப்பு கடிதங்கள் கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட மத்திய நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆசிரிய பயிற்சி கற்கை நெறிக்கான பயிற்சி மஹரகம, கண்டி, வெயாங்கொட, களுத்துறை, வவுனியா ஆகிய இடங்களிலுள்ள கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெறுகின்றன. பாடசாலைக் கல்வியை தரமான வகையில் மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சர்...

யாழ்ப்பாணத்தில் கரையோர சூழல் பாதுகாப்பு தினம்

யாழ் மாவட்டத்தில் கரையோரப்பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைவாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் வடமாகாணத்தின் கடலோர பகுதிகளை சுத்திகரிக்கும் பிரதான நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கடல்சார் சூழல் பாதுகாப்பு சபை , கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்...

தமிழ் மொழியில் சேவையைப் பெற புதிய தொலைபேசி இலக்கங்கள்

தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை தமிழ் மொழியில் முன்வைக்க புதிய பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்காக இந்த புதிய இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 0766 22 49 49 மற்றும் 0766 22 63 63 என்ற இலக்கங்களுக்கு...

புங்குடுதீவு மாணவி படுகொலை : சட்டமா அதிபர் திணைக்களம் சரியான முடிவை எடுக்கும்

சட்டமா அதிபர் திணைக்களம் சரியான நடவடிக்கை எடுக்கும் வகையில், குற்றப் புலனாய்வு பொலிஸாரின் விசாரணை அறிக்கையானது உரிய முறையில் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு, இன்று செவ்வாய்க்கிழமை (20) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 12...

சிறுமி துஷ்பிரயோகம்: காதல் நாடகமாடியவர் உட்பட நால்வர் கைது

பருத்தித்துறை, சித்திவிநாயகர் பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர் உட்பட 4 சந்தேகநபர்களை, பருத்தித்துறைப் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (20) கைதுசெய்தனர். 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை காட்டி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார். அதன்பின்னர்,...

வலி.வடக்கில் காணிகளை விடுவித்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுமாறு சிங்கள மக்கள் ஜனாதிபதிக்கு மகஜர்

வடக்கு மக்களின் காணிகளை அவர்களுக்கு விரைவாக வழங்கி மீள்குடியேற்ற வேண்டுமென தென்பகுதி மக்கள் ஜனாதிபதிக்கு எதிர்வரும் வியாழக்கிழமை மகஜரொன்றை அனுப்பவுள்ளனர். நல்லிணக்கத்தை மேம்படுத்துவது தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் கருவலஸ்வெல மற்றும் இடங்களை சேர்ந்த தென்பகுதி மக்களை கடந்த 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். அம்மக்கள் வலி.வடக்கில் இருந்து...

குழந்தைகளுக்கான மாதிரிக் கார் யாழில் வடிவமைப்பு

யாழ் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான மாதிரி காரொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பண பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக கடமையாற்றும் கலாநிதி மகேஸ்வர குருக்கள் சரவணபவ ஐயர் மற்றும் அவரது குழுவினரே குழந்தைகளுக்கான காரினை வடிவமைத்துள்ளனர். மூன்று மாதங்களில் பகுதி நேரமாக உருவாக்கப்பட்ட குறித்த காருக்கு, 30 ஆயிரம் ரூபா வரை செலவுசெய்யப்பட்டுள்ளது. கழிவுப்பொருட்கள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள...

நடந்து முடிந்த யுத்தம் பல பாடங்களைக் கற்றுத்தந்துள்ளது ; முதலமைச்சர் விக்னேஸ்வரன்

நடந்து முடிந்த போரானது தமிழ் மக்களுக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். போரினால் தேடி வைத்த சொத்துக்கள், காணி, பூமி, வீடு, வாசல், நகை நட்டுக்கள், பொருள், பண்டங்கள் அனைத்தையும் இழந்த நிலையில் கல்வி மட்டுமே தற்போது எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வட்டுக்கோட்டை யாழப்பாணக் கல்லூரியில் இடம்பெற்ற வடமாகாண 10 ஆவது...

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி எவையும் ஏற்றப்படவில்லை

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி எவையும் ஏற்றப்படவில்லை என முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்ட போது, புனர்வாழ்வு மையத்தின் பொறுப்பாளராக தான் பதவி வகித்ததாகவும், அவர்களுக்கு எந்தவிதமான விஷ ஊசியும் ஏற்றப்படவில்லை என்பதை உறுதியாகத் கூறுவதாக சுசந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை திரியாய அரிசி மலையில்,...

எழுக தமிழ் : தமிழரசுக் கட்சி, வணிகர் கழகம் ஆதரவில்லை

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' பேரணிக்கு, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் என்பன ஆதரவு வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளன. தமிழர் தாயகத்தில் சிங்கள, பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழர் தேசம் தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித்...

குரங்குகளில் அட்டகாசத்திலிருந்து தப்பிய குழந்தை!

சாவகச்சேரி (தென்மராட்சி) பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள வீட்டில் ஏணையில் படுத்திருந்த குழந்தை குரங்குகளின் அட்டகாசத்திலிருந்து நேற்று திங்கட்கிழமை (19) தப்பியுள்ளது. தாய் குழந்தையை ஏணையில் கிடத்திவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். இதன்போது, வீட்டின் கூரையின் மீது கூட்டமாக குரங்குகள் பாய்ந்தமையால், கூரையின் சீற்கள் உடைந்து, ஏணையைச் சுற்றி வீழ்ந்தன. இருந்தபோதும், ஒரு துண்டுகூட குழந்தை...

27,603 மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகினர்!

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியுள்ள நிலையில், 27,603 மாணவர்கள், இவ்வருடம், பல்கலைக்கழகத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி www.ugc.ac.lk அல்லது www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்தினூடாக மாணவர்கள் தமது வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ugc என...

தமிழர்தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வை அடைய வரலாற்றில் இன்னொரு சந்தர்ப்பம்

எழுகதமிழால் பேரெழுச்சி கொண்டு தமிழர்தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வை அடைய வரலாற்றில் இன்னொரு சந்தர்பம் தமிழ் மக்களே தவறவிடாதீர்கள் எனவும் இலட்சமாய் முற்றவெளி நோக்கி அணிதிரளுங்கள் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதன் முழு வடிவம்..

மண்பறிப்பை தடுப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் வரலாற்றுக் கடமை

எழுக தமிழ் பேரணி குறித்து பேராசிரியர் ஓவியர் புகழேந்தி. கருத்து எனது அன்பான ஈழத்தமிழ் உறவுகழே வணக்கம். இந்த அறிக்கையின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்று கூறமுடியாத சூழலிலும் மனநிலையிலும் கனத்த இதயத்தோடு பல்வேறு நினைவுகளைச் சுமந்து இதை எழுதுகின்றேன். இலங்கையில் தமிழினம் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு துன்பங்களை துயரங்களை இழப்புகளை...

எம் தாய்மொழி தமிழைப் போற்றி பாதுகாக்க வேண்டியது எமது கடமை

மாணவர்கள் பல்வேறு மொழிகளிலே பாண்டித்தியம் பெற்றிருத்தல் இன்றியமையாததாகும். தாய்மொழி தமிழை போற்றிப்பாதுகாக்க வேன்டியது எமது கடமை. அதே சமயம் எமது சகோதர மொழியாகிய சிங்களத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். இது மக்களிடையே கருத்துக்களை வெளியிடவும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் உறுதுணையாக இருக்கும் என பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் யாழ். இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு...
Loading posts...

All posts loaded

No more posts