Ad Widget

தமிழ் மொழியில் சேவையைப் பெற புதிய தொலைபேசி இலக்கங்கள்

தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை தமிழ் மொழியில் முன்வைக்க புதிய பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்காக இந்த புதிய இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி 0766 22 49 49 மற்றும் 0766 22 63 63 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் தமிழில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நடவடிக்கை வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts