Ad Widget

எம் தாய்மொழி தமிழைப் போற்றி பாதுகாக்க வேண்டியது எமது கடமை

மாணவர்கள் பல்வேறு மொழிகளிலே பாண்டித்தியம் பெற்றிருத்தல் இன்றியமையாததாகும். தாய்மொழி தமிழை போற்றிப்பாதுகாக்க வேன்டியது எமது கடமை. அதே சமயம் எமது சகோதர மொழியாகிய சிங்களத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். இது மக்களிடையே கருத்துக்களை வெளியிடவும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் உறுதுணையாக இருக்கும் என பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் யாழ். இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

sri-bavan

மேலும் தெரிவிக்கையில், என் மாணவப் பருவத்தை நினைத்துப் பார்க்கையில் நான் அமைதியான சூழலிலே கல்வி பயின்றது நினைவில் நிற்கின்றது. படிப்பில் முக்கியத்துவம் எழுவதற்கு அச் சூழல் மிகவும் ஏதுவாக அமைந்தது. ஆனால் இன்றைய மாணவ சமுதாயம் பல சவால்களை எதிர்நோக்க வேண்டி உள்ளது என தெரிவித்தார்.

மேலும் பல இன்னல்களையும் இழப்புக்களையும் சந்தித்து மனதாலும் உடலாலும் காணப்பட்டு நிற்கும் மாணவ சமுதாயத்தின் முன் காலம் என்னை இந்நாட்டின் பிரதம நீதியரசராக நிற்க வைத்துள்ளது என்றார்.

மேலும் உலகின் பல இன்னல்களுக்கு மத்தியில் மனித இனம் வாழ்கிறது, வளர்கிறது. உலகில் அழிவுகள் வராமல் தடுக்க உலகநாடுகள் போட்டிபோடுகின்றன. இதனாலேயே பல அழிவுகள் ஏற்படுகின்றன என்றார்.

மேலும் எல்லோரையும் மன்னிக்கப் பழகுங்கள், இன்றைய மாணவத்தலைவர்களே நாளைய மக்கள் பிரநிதிகள். எனவே சிறுவயதிலிருந்தே ஒழுக்கத்தை பேணுங்கள். உடல் பலவீனத்தையோ மனப்பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகாதீர்கள். பயனுள்ள நூல்களை படியுங்கள். நூல்களை வாசிக்கும் பழக்கம் இளம் சமுதாயத்திடம் அருகிவருகிறது. மாணவர்கள் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Related Posts