- Thursday
- May 7th, 2026
இரண்டு காலாவதி திகதியிடப்பட்ட ஐஸ்கிறீம்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 4500 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் திங்கட்கிழமை (29) தீர்ப்பளித்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் இயங்கி வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறு இரண்டு திகதிகள் இடப்பட்டிருந்த ஐஸ்கிறீம்களை, அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர். அதனை விற்பனை செய்த வர்த்தகருக்கு...
'எனது மனைவி கொலை செய்யப்பட்டுத்தான் இறந்தார்' என கணவரால் கூறப்பட்டமையால், அச்சுவேலி தோப்பு மயானத்தில் புதைக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம். மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி மேற்கு தென்மூலை பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி சகோதரர்களுக்கிடையில்...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்கான உதவித் தலைவர் எனட் டிக்ஷன் தலமையிலான அதிகாரிகள் குழு, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. நேற்றையதினம் யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த குறித்த குழுவினர், சுமார் ஒரு மணி நேரம் முதலமைச்சருடன் கலந்துரையாடலை முன்னெடுத்தனர். இச் சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர்...
யுத்த காலத்தில் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான எதிரப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவில் சிலர் பேரணியாக சென்று ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும், பிரதேச செயலகங்களில்...
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவி (hacking) அதிலிருந்த தரவுகளை மாற்றியதாக கூறப்படும் மற்றுமொரு இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு 26 வயதாகும். இதேவேளை, நேற்றையதினம் கடுகன்னாவ பகுதியில் வைத்து இந்த சம்பவம் தொடர்பில் 17 வயதான வாலிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இரு சந்தேகநபர்களையும் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,...
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனுடைய பெயரை, இறுதிக் கட்ட ஈழப் போருக்குப் பின்னர் காணாமல் போனோர் தொடரபான அலுவலகத்தில் பதிவு செய்ய தான் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். பிரபாகரனின் சகோதர, சகோதரிகள் சம்மதம் தெரிவித்தால் இதைச் செய்ய தான் ஆயத்தமாக இருப்பதாகவும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்....
அதிக சம்பளத்துடன் கட்டார் நாட்டில் வேலை வாய்ப்பு என இணையதளங்களில் வெளியாகும் செய்திகளை நம்பி ஏமாறவேண்டாம் என கட்டார் நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இணையத்தளங்களூடான விளம்பரங்களை நம்பி இலங்கையிலிருந்து கட்டார் நாட்டுக்கு வேலைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு வருபவர்களில் பலர் வேலையற்று காணப்படுவதாகவும் அத்தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான விளம்பரங்கள் தொடர்பில்...
ஊரில் ஒரு பிரச்சனை எனில் அக் காலத்தில் கோயிலில் ஊரவர் கூடி அந்த பிரச்சனையை தீர்ப்பார்கள். ஆனால் தற்காலத்தில் கோயிலை மையப்படுத்தி ஊரில் பிரச்சினையை ஏற்படுத்து கின்றார்கள் என ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்றய தினம் கோயில் வழக்கொன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போதே நீதவான்...
வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே அண்மையில் கிளிநொச்சியில் கருத்து தெரிவிக்கும் போது வடமாகாண கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்து இருந்தார். இக் கருத்து தொடர்பில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கும் போது, வடமாகாண கல்வி அமைச்சுக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியே 4 ஆயிரம்...
எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்குப் பயணம் செய்யும் ஐநா செயலரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ள நிலையில், தன்னையும் அவர்களுடன் வந்து சந்திக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐநா செயலரின் இலங்கைப் பயணத்தின்போது...
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (திங்கட்கிழமை) வருகை தந்த உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான பதில் பொறுப்பதிகாரி அனற்மாரி டில்ஷன் தலைமையிலான குழுவினர் மருதனார்மடத்தில் அமைந்துள்ள சபாபதி நலன்புரி நிலயத்திற்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துள்ளனர். நேற்றைய தினம் காலை 11.00 சபாபதி நலன்புரி நிலையத்திற்குச் சென்ற உலக வங்கிக் குழு அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்...
கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தின் உப்பு அறுவடை, கடந்த 26 வருடங்களுக்கு பின்னர் நேற்று (திங்கட்கிழமை) முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், கண்டாவளை பிரதேச செயலர் ரீ.முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டு அறுவடையினை ஆரம்பித்து வைத்துள்ளனர். இவ் வருடம் 800 மெற்றிக்தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, பலருக்கு வேலை வாய்ப்பினையும்...
தெல்லிப்பழை தபாற்கந்தோர் அருகில் நேற்றுபிற்பகல் கடற்படை “ட்ரக்“ மோதி வயோதிபர் மரணமடைந்துள்ளார். தெல்லிப்பளையைச் சேர்ந்த 60வயதுடைய ஐயம்பிள்ளை சற்குணராஜா என்பவரே மரணமடைந்தார். இவ் விபத்து நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. விபத்தில் காயமடைந்தவர் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிக்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி...
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹக் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடுகண்ணாவையில் வைத்து 17 வயதுடைய பாடசலை மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளான்.
யாழ்ப்பாணம், நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தெற்கிலிருந்து அங்கு செல்லும் பக்தர்களுக்காக, யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கும் ரயில்களில் குளிரூட்டப்பட்ட மூன்று பெட்டிகளை இணைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுது;துள்ளது. இன்று (30), நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) ஆம் திகதி ஆகிய மூன்று தினங்களுக்கே இச்சேவை நடத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், நாளாந்தம் கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை...
கோப்பாய் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற இ.போ.ச.பஸ்ஸும் வைத்தியர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ்ஸுடன் மோதிய மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டதாகவும் அந்த இடத்திலேயே வைத்தியர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்....
அற்புதன் நடராஜன் மற்றும் மகேஸ்வரி உட்பட யாழில் நடைபெற்ற முக்கிய கொலைகளுடன் ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் உறுப்பினர்கள் பலர் சம்பந்தப்பட்டுள்ளதாக, அக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்த, சு.பொன்னையா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். கடந்த 1990ம் ஆண்டு முதல்...
எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமையன்று, இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன், இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் மூன், யாழ்ப்பாணத்துக்கும் சென்று, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் மற்றும் தமிழ்த் தேசியக்...
காங்கேசன்துறை வீதியில் இந்துக் கல்லூரிக்கு முன்பாகவும் மற்றும் நாவலர் வீதி பாப்பையா கடைச் சந்தி ஆகியவற்றில் அமைக்கப்பட்ட குவிவு வில்லைகள் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளன. யாழ்.மாநகர சபைக்குட்பட்ட வீதிச் சந்திகளில் குவிவு வில்லைகள் பொருத்தும் நடவடிக்கைகள் யாழ்ப்பாணம் மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்டது. கே.கே.எஸ் வீதியும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீதியும் சந்திக்கும் சந்தி, கஸ்தூரியார் வீதியும்,...
க்கோயா பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை காணொளியாக பதிவு செய்து, கையடக்க தொலைபேசி ஊடாக பார்த்து கொண்டிருந்த 5 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அந்த சிறுமியின் பெற்றோர், ஹெட்டன் காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காணொளியை பதிவு செய்து வைத்திருந்த கெமராவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...
Loading posts...
All posts loaded
No more posts
