Ad Widget

கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தரப்படும்

கடந்த வெள்ளிக்கிழமை தீயினால் எரிந்து நாசமான கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈட்டை பெற்றுத் தர முயற்சி எடுக்கப்படும் என தீயினால் எரிந்து நாசமான கிளிநொச்சி பொதுச்சந்தையை நேற்று (திங்கட்கிழமை) பார்வையிட்ட பின்னர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

vanni

நேற்றய தினம் நாடளுமன்ற உறுப்பினரான சிறீதரன், உள்ளுராட்சி உதவி ஆனையாளர் பிரபாகரன், பிரதேச சபைச்செயலாளர் கம்சநாதன், வர்த்தக சங்கத்தலைவர் ஜேசு, வர்த்தக சங்க நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தீக்கிரையான கடைதொகுதிகளை பார்வையிட்ட பின், கருத்து தெரிவித்த நாளுமன்ற உறுப்பினார் மாவை சேனாதிராஜா,

போரினால் பாதிக்கப்பட்டு பல அழிவுகளை சந்தித்த இந்த மக்கள் தங்களுடைய வியர்வைச்சிந்தியும் வங்கிகளில் கடனை பெற்றும் இங்கு வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இவர்களுக்கு ஏற்பட்ட தீ விபத்து இவர்களை எவ்வாறு பாதிப்புள்ளாகி இருக்கும் என்பது எனக்கும் தெரியும்.

சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் நானும் திரு சுமந்திரனும் பிரதமரோடு நேரடியாக இதைப்பற்றி கதைத்தோம். அவர் உடனடியாக எனக்கு மதிப்பீட்டை தாருங்கள் நான் நடவடிக்கை எடுப்தாக கூறினார். ஆகவே நாங்கள் தொடர்ச்சியாக இவ்விடயத்தை கையாண்டு நட்ட ஈட்டை பெற்று தருவதற்கான முழு முயற்சிகளையும் எடுப்போம். அதே வேளை நிரந்தர கட்டங்களை அமைத்தல் அதன் எதிர்கால பாதுகாப்பு குறித்தும் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்

Related Posts