- Friday
- August 14th, 2026
பிரபல பாடசாலைகளில் வைத்தியர்களின் பிள்ளைகளை உள்வாங்கும் சலுகை வழங்கப்பட்டிருப்பது போல, கல்வி துறைகளில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. கல்வித் துறைக்குள் பணியாற்றும் ஊழியர்களுக்கான சலுகைகளை கழித்து, வைத்தியர்களுக்கு மட்டும் அச் சலுகையை பெற்றுக் கொடுப்பது கவலையளிப்பதாக,...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றடைந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி எதிரவரும் 21ம் திகதி அங்கு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று ஆரம்பமாகும் ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரையாற்றுவதற்கு நாளை மறுதினம் நேரம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த...
கிளிநொச்சி தீ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி உடனடி கொடுப்பனவாக 135 வர்த்தகர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டள்ளது. கிளிநொச்சி சந்தை கட்டத்தொகுதியில் வைத்து இக்கொடுப்பனவுகளை வடக்கு மாகாண முதலமைச்சர் வழங்கி வைத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடக்கு...
ஸீகா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் குறித்து ஸ்ரீலங்காவில் சிவப்பு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய பகுதிகளில் இந்த நோய்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிக்குன்குனியா இந்திய தலைநகர் புதுடில்லியில் வேகமாக பரவிவருவதுடன், ஸீகா வைரஸ் சிங்கப்பூரில் அதிகமாக பரவி வருவதாகவும் தற்போது தாய்லாந்திலும் அதன்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வித்துடலை நாம் எரித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டோம். அப்போது நான் அங்கிருந்து நினைவுப்பொருளாக அவரது அடையாள அட்டையினை எடுத்து வைத்திருந்தேன். அதனை என்னுடனேயே வைத்துள்ளேன். இறுதிக்கட்டப் போரில் தாம்தான் விடுதலைப்புலிகளின் தலைவரைக் கொன்றது எனக் கூறிக்கொள்ளும் 53ஆவது பிரிகேட்டிற்குத் தலைமைதாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆங்கில ஊடகமொன்றுக்கு மேற்கண்டவாறு...
யாழ்ப்பாணத்தில் பாரியளவிலான சிறைச்சாலையொன்று அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிறைச்சாலை சுமார் 1000 கைதிகளை அடைத்துவைக்கக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதகற்கட்டப் பணிகள் நிறைவடைந்துவிட்டதெனவும், இதன் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக சுமார் 623 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நிர்மானிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார்...
போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளுக்கே நாட்டில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகின்றதெனவும், நாங்கள் சர்வதேச விசாரணையாளர்களையே கொண்டுவரவுள்ளோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களை நேற்று (சனிக்கிழமை) முல்லைத்தீவில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில், நாங்கள் சர்வதேச நீதிபதிகள் தொடர்பாகக் கதைப்பதற்கு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 2016ஆம் ஆண்டுக்குள் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துவிடும் எனச் சொன்னார். 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் அவர் டேவிட் கமரூன் செய்ததைப்போல் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு அதில் அங்கம்...
இனவாதம் இல்லாத இலங்கையினை உருவாக்க வேண்டுமென்பதே எமது இலக்கு என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடத்தினை நேற்று (17) திறந்து வைத்த பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அரசியல் ரீதியான பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பது அடுத்த...
தமிழகத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை. இராசேந்திரன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
பூமிக்கு அருகாமையில் ஆபத்து ஒன்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பூமிக்கு அருகில் இன்று பயணிக்கும் பாரிய விண்கல் ஏதாவதொரு சமயத்தில் பூமி மீது மோதுண்டால், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 200 அடி நீளம் கொண்டதென கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறான வாய்ப்புகள் மிகவும் குறைவு என துறைசார்...
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக சாத்வீக வழியில் போராடி மரணத்தைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறைப்பொறுப்பாளர் திலீபனின் 29ஆவது நினைவு தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து நடத்தவுள்ள குறித்த நினைவேந்தல் நிகழ்வானது, தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் நாளை...
யாழ். மாவட்ட செயலக நிர்வாகக் கட்டடத் தொகுதி இன்று (சனிக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாக அலுவலகத்தை திறந்து வைக்கும் முகமாக யாழ். சென்ற பிரதமருக்கு அங்கு பொன்னாடை போர்த்தி தமிழ் கலாச்சார முறைப்படி பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான வாத்தியங்கள்...
வடக்கு – கிழக்கு இணைப்பை சிங்களத் தலைவர்கள், முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இந்திய தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். எனவே அந்தப் பாரம்பரியமான வடக்கு, கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப்பின் ஞாபகார்த்த மற்றும் பரிசளிப்பு விழா...
உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபரின் நியமன விவகாரத்தில் அதிகளவு அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தமது தரப்பில் இருந்து எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்கவில்லை என்பதை உண்மையான விடயம் எனவும் யாழ்ப்பாணத்திலுள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை...
கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு தொடர்பிலான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தபட்டுள்ளது. தியாகதீபம் திலீபனின் இருபத்தொன்பதாவது நினைவுதினம் என தலைப்பிடப்பட்டு, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகள் நேற்று இரவு ஒட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, மல்லாவிப் பொலிஸாரின் பயன்பாட்டில் இருந்த தனியார் காணி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள யோகபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இண்டு ஏக்கர் காணியினை கடந்த ஏழு ஆண்டுகளாக பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் குறித்த காணியில் உள்ள வீடு, மல்லாவி பொலிஸ் நிலையமாக இயங்கி வந்தது....
உடுவில் மகளீர் கல்லுாரி தொடர்பாக பெற்றோர் சங்கம் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையின் முழு வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது. உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் நியமனம் தொடர்பாகவும், அதன் போது நடைபெற்றுள்ள நேர்மையற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் என்ற வகையிலும், பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு என்ற வகையிலும், கல்லூரிச் சமூகத்தின்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தமது விமானங்களில் Samsung Note 7 தொலைபேசிகளின் பாவனைக்கு முற்றாகத் தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மின் வலுவேற்றும் போது கைபேசிகள் வெடித்துள்ளதாக 10 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து,...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நான் சாவடைவதற்குள் காணாமல் ஆக்கப்பட்ட எனது மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று மக்ஸ்வெல் பரணகம தலை மையிலான ஜனாதிபதி ஆணைக் குழுவின் முன் கதறி அழுத தாய், அவரது கோரிக்கைகள் நிறை வடையாத நிலையில் உயிரிழந்துள்ளார். 2015ஆம் ஆண்டு பருத்தித் துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற காணாமல்...
Loading posts...
All posts loaded
No more posts
