- Friday
- August 14th, 2026
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தப்படவுள்ள எழுக தமிழ் எனும் தொனிப்பொருளிலான மக்கள் பேரணி பாரிய எழுச்சியுடன் அமைய வேண்டும் என தெரிவித்துள்ள த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இதில் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே...
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ ஆனந்த சங்கரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியுள்ளார். அரசியல் கைதிகளை நீண்டகாலமாக தடுத்து வைத்திருப்பதற்கு நியாயமான எந்தவொரு காரணமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு தடவைகள் அவர்கள் நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட போதிலும் எந்தவொரு வழக்கு விசாரணைகளும் இன்றி...
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றும் என தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். ஜெனிவாவில் அரசாங்கம் உறுதி மொழிகளை வழங்கிய போதிலும் சர்வதேச விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குதல் உள்ளிட்ட விடயங்களில் பின்வாங்கியுள்ளதாக...
அண்மையில் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராக போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் என்ன செய்தார்கள்? என யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்பதற்கு அந்த மாணவிகள் ஓடிச் சென்ற இடங்களைப் பார்க்கின்றபோது எனக்கு வெட்கமாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா நேற்றைய...
அரச அலுவலகங்களில் மற்றும் அரச திணைக்களங்களில் தமிழ் மொழியைக் கொலை செய்வதற்கு இடமளிக்கமுடியாது என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள இலத்திரனியில் அறிவிப்புப் பலகைககளில் தமிழ் மொழி மோசமான தவறுகளுடன் பிரசுரிக்கப்படுவதை நேரில் சென்று ஆராய்ந்த நிலையிலேயே அமைச்சர் இந்தக் கருத்தை...
கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு சீனி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரித்துள்ளார். இது தொடர்பிலான சுற்றிவளைப்புகளை நாடு முழுவதும் ஆரம்பிக்குமாறு அனைத்து தரப்புகளுக்கும் அறிவித்துள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் அமைச்சர் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சீனிக்கான விசேட வர்த்தக பொருட்களுக்குரிய வரியை,...
கிளிநொச்சி பொதுச் சந்தையில்,வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளன. தீயை கட்டுப்படுத்த முயன்றவர்களில் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது நேற்றிரவு , 8.30 க்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து...
இலங்கையில் நடன கலையை பாதுகாப்பதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. தமிழ் நடன மற்றும் ஆதிவாசிகளின் கலைகளின் பாதுகாப்புக்காகவும் நிதி உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளது. நாட்டின் பாரம்பரிய மற்றும் வழிபாட்டு கலைத்துறை நடனங்கள் உலக நாடுகளில் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இவ்வருடத்தில் கலாசார பாதுகாப்புக்காக அமெரிக்க நிதியத்திலிருந்து, தெரிவு செய்யப்பட்ட...
வட மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ஏ.ஏ சரத்குமார கடமையை பொறுப்பேற்றுள்ளார். நேற்று முன்தினம் காங்கேசந்துறையில் அமைந்துள்ள அலுவலகத்தில் கடமையேற்றுக்கொண்டார். இவரை வரவேற்பதற்காக வட பகுதியில் இருந்து பொலிஸ் உயரதிகாரிகள் பலர் வருகை தந்திருந்தனர். பொலிஸ் மரியாதை அணிவகுப்பை அடுத்து மங்கள விளக்கேற்றப்பட்ட பின்னர் சுப நேரத்தில் கையெழுத்திட்டு தனது...
தமிழ் மக்களை எதிர்காலத்தில் ஒன்றிணைக்கப்போவது அரசியலல்ல எனவும் அது தமிழ் மொழியே எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியம், தமிழ்க் கலைகள், தமிழ்ப் பாரம்பரியங்கள், தமிழ் வாழ்க்கை முறை, சமூக ஒருமைப்பாடு ஆகியன வடகிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் வழிவகுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கலை, கலாச்சார...
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி, கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்விபயிலும் ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை புதுப்பித்துள்ளார். இவர் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து ஏற்கனவே இருந்த சாதனை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம...
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், கர்நாடகாவிலிருந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இடம்பெறும் பூரண கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று வௌ்ளிக்கிழமை (16), உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் நீண்ட காலமாக பங்கெடுத்து வரும் தமிழக மக்கள் தாக்கப்பட்டமையை எதிர்த்தே, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக, போரால் பாதிக்கப்பட்ட மக்கள்...
புதிய அரசியல் சாசனமானது பொதுஜன வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன், அதற்கு மாறாக எவரும் பொதுமக்களை ஏமாற்ற முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த நாட்டில் உருவாக்கும் புதிய அரசியல் யாப்பானது சகல மக்களுக்கு ஏற்புடையதாகவும் நாடு பிளவுபடாத வகையிலும் ஒருமித்த நாட்டினுள் சகலரும் சம...
அலைபேசி அழைப்பு மற்றும் இணைய பாவனைக்கான தரவுக் கட்டணத்தை குறைக்குமாறு சோஷலிச இளைஞர் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம் காரணமாக அழைப்பு மற்றும் இணைய தரவுக் கட்டணம் என்பன 100க்கு 50 சதவீதமளவில் அதிகரிக்கப்படும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அழைப்பு மற்றும் இணைய பாவனைக்கான தரவுக் கட்டணங்களுக்கு...
இன்று (16) இரவு 10.24 முதல் நாளை அதிகாலை 2.23 மணி வரையில் சந்திரகிரகணம் தென்படும் என இலங்கை கோள்கள் மண்டலம் தெரிவித்துள்ளது. முழு சந்திர கிரகண நிகழ்வு நள்ளிரவு 12.24 மணிக்கு தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெறவுள்ள சந்திர கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும், கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும்...
‘தியாகி திலீபனின் அஹிம்சை வழிப் போராட்டத்தினை முன்மாதிரியாகக் கொண்டு அஹிம்சை வழியில் போராடி தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்போம்’ என முன்னாள் போராளிகள் சபதம் எடுத்துள்ளனர். தியாகி திலீபன் அஹிம்சை வழிப் போராட்டத்தின் 29வது நினைவு நாளான இன்று (வியாழக்கிழமை) யாழ்.நல்லூர் வடக்கு வீதியில் அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நல்லூர் வீதியில் உள்ள...
வெடிக்காத நிலையில் இருந்த செல் ஒன்றை உடைக்கமுற்பட்டவேளை, அந்தச் செல் வெடித்து யாழ்ப்பாணத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்.மணியம்தோட்டம் உதயபுரம் 3ஆம் குறுக்கு பகுதியைச் சேர்ந்த தாகிதப்பிள்ளை அன்ரன் பொஸ்கோ (வயது – 37) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். பழைய செல்களில் இருக்கும் மருந்துகள் மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், குறித்த நபர் வெடிக்காத செல்களில் இருந்து...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத் கமகேவை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பருத்தித்துறை நகர்ப்பகுதியில் வயோதிப மாது ஒருவர் பஸ்ஸின் பின் சில்லுக்குள் அகப்பட்டு மரண மடைந்துள்ளார். நேற்று புதன் கிழமை நண்பகல் பருத்தித்துறை நகரில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஐயனார் கலட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இ.கிருஸ்ணலீலா (வயது 68) என்ற வயோதிப மாதுவே மரணமடைந்தவராவார். நேற்றுமுற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான வயோதிப மாது பருத்தித்துறை...
வடமாகாண மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் ஆகியோருடன் மாகாண மக்களின் மருத்துவ சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக வடமாகாண வைத்தியர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில்உள்ள 5 மாவட்டங்களையும் இனைத்து இச்சங்கம் உருவாக்கப்படுகிறது. மன்றத்தின் தலைவர் ப.அச்சுதன் தலைமையில் கிறீன்கிறாஸ் விடுதியில் நேற்றையதினம் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது முதலாவது பணியாக வைத்திய மன்றத்தினால்...
Loading posts...
All posts loaded
No more posts
