நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 29ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு

தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த 29ஆவது தினமாகிய இன்றைய தினத்தில் நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை பொதுமக்கள் சிலரால் மலர்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் காலை 10 மணியளவில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக 12 தினங்களும்...

மதுபான பாவனையை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் மதுபான நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கெனவே செயற்பாட்டிலுள்ள மாவட்ட செயலாளர் குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அந்த அறிக்கை கிடைத்தவுடன் மதுபான பாவனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு...
Ad Widget

மஹிந்தானந்த அளுத்கமகே சற்றுமுன்னர் கைது!

முன்னாள் அமைச்சரும் பராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினராலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்றிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

வலி வடக்கில் பின்நகர்த்தப்படும் இராணுவத்தினரது பாதுகாப்பு வேலிகள்!!

அடுத்த மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தரும் போது வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 800 ஏக்கர் காணிகளிலும் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முன்னாயத்தங்கள் அரச அதிகாரிகளினாலும், இராணுவத் தரப்பினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இனங்காணப்பட்ட பகுதிகளில் உள்ள உயர்பாதுகாப்பு வலய...

எழுக தமிழ்! : தமிழ் மக்கள் பேரவை

தமிழர் தாயகத்தில் சிங்கள – பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழ் தேசியத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் யுத்தக் குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான மாபெரும் பேரணி ! செப்ரெம்பர் 24, 2016 (சனிக்கிழமை) அன்று யாழ் நகரில் !! வடக்கு...

கிளிநொச்சி பளை பகுதியில் கோர விபத்து : மேலும் ஒருவர் பலி

கிளிநொச்சி பளை, புதுக்காடு சந்திக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புநோக்கி பயணித்த தனியார் பேரூந்துடன், வவுனியாவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்று மோதியுள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற மரண வீடொன்றில் பங்கேற்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று...

கல்வியியல் கல்லுரிகளுக்கு விண்ணப்பங்கள்

கல்வியியல் கல்லுரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். இம்முறை பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். உயர்தரத்தில் இரண்டு பாடங்களில் சித்தியடைந்த மாணவர்கள் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி பிரிவின்...

சிகரட்டில் நான்காயிரத்து 800 விஷ இரசாயனங்கள்

ஒரு சிகரட்டில் நான்காயிரத்து 800 விஷ இரசாயனங்கள் இருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதில் 250க்கும் அதிகமானவை கடுமையான விஷம் கொண்ட இரசாயனங்களாகும். புற்றுநோயை ஏற்படுத்தும் 65 வகையிலான இரசாயனங்களும் இதில் காணப்படுகின்றன. இதனால், சிகரட் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக ஒன்பது கோரிக்கைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி...

அதிகளவில் தற்கொலை செய்யும் ஆண்கள்

நாட்டில் ஆண்கள் தற்கொலை செய்யும் அளவு அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார். உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். உலகலாவிய ரீதியிலான தற்கொலை செய்வோர் தரவுகளின் படி இலங்கை 22ம் இடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி கடந்த வருடம் நாட்டில் 3000...

இளைஞர் வெட்டிக் கொலை :ஒருவர் அடையாளம் காணப்பட்டார்

மானிப்பாய் - சங்குவேலி பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சங்குவேலி - சிவஞானப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமாரன் பிரணவன் (வயது 31) என்பவர் கடந்த மாதம் 17ம் திகதி, வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச குற்றப் புலனாய்வு...

வான் ஒன்றும் பேருந்தும் மோதிக்கொண்டதில் நால்வர் பலி

கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் வான் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதில் நான்கு பேர் உயிரிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வயதெல்லை அதிகரிப்பு

வட மாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்பவர்களின் வயதெல்லையை 40 ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வயதெல்லை தற்போது 35 ஆக காணப்படுகின்ற நிலையில், வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். யாழ் நகரிலுள்ள...

தொடர்ந்தும் இராணுவம் எங்கள் நிலப் பரப்புக்குள் இருப்பதை அனுமதிக்க முடியாது!

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்பட வேண்டிய 4419 ஏக்கர் நிலப் பகுதியில் ஓரங்குலத்தைக் கூட விடுவிக்க முடியாது என, யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கு கண்டனம் வௌியிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குடாநாட்டிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மீள்குடியேற்றத்தைப் பூரணப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாகக் குறித்த நிலங்கள்...

புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் போருக்குப் பின்னர் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை :பொ.ஐங்கரநேசன்

எமது விடுதலைப் போராட்டத்தைப் புலம்பெயர்ந்து சென்ற எமது தமிழ் உறவுகளே பொருளாதார ரீதியாகத் தாங்கி நின்றார்கள். அவர்கள் இப்போதும் இங்குள்ளவர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். போராட்ட காலத்தில் அவர்களது உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆனால், போருக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லையென்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். வவுனியாவில் கால்நடை உற்பத்தி...

புதிய வற் திருத்தம் விவரம்

அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ள 15 சதவீத வற் (பெறுமதி சேர் வரி)யில் உள்ளடங்கும் மற்றும் உள்ளடங்காத பொருட்கள் மற்றும் சேவைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. வற் விலக்களிப்பு தனியார் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் நோய் கண்டறியும் சோதனை, வைத்திய ஆலோசனை சேவைகள், வெளிநோயாளர் சேவை, ஆகியவற்றுக்கே புதிய வற் அதிகரிப்பு விலக்களிக்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டவை ஆண்டின் மொத்த வருமானம் 50...

இந்தியாவிலிருந்து 90 பேர் நாடு திரும்பினர்

யுத்த காலத்தில் இந்தியாவின் தமிழகத்துக்கு தப்பிச் சென்ற 90 தமிழர்கள் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான இரு விமானங்களில் இவர்கள் நாட்டு வருகை தந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு நாடு திரும்பியவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் ஆவர். இவர்களிடம் குற்றப்...

சட்டவிரோதமாக இந்தியா சென்ற முல்லைத்தீவு நபர் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் ஒருவரை இந்திய கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். மீனவர்கள் கொடுத்த தகவலுக்கு அமைய குறித்த நபரை தனுஷ்கோடி மூன்றாம் மணல்திட்டில் வைத்து கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த நபரிடம் இந்திய ரூபாவில் ஒரு இலட்சம் மதிப்புடைய அமெரிக்க டொலர்கள் இருந்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த அருள்...

24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி!

கிளிநொச்சி - இரணைதீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரணைதீவு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, நேற்று மாலை முதல் மீனவர்கள் அங்கு தங்கியிருந்து தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக 1992 ஆம் ஆண்டின் பின்னர் இரணைத்தீவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் படை முகாம்கள் அகற்றப்பட்டால் மனிதப் புதைகுழிகள் வெளிவரும்: வீரவன்ச எச்சரிக்கை

வன்னியிலுள்ள படை முகாம்கள் அகற்றப்பட்டால் அங்குள்ள மனிதப் புதைகுழிகள் வெளிவரும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் முக்கியஸ்தரான நாடாளுமுன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அச்சம் வெளியிட்டுள்ளார். அவ்வாறான நிலை ஏற்பட்டால் சிறிலங்கா இராணுவம் மீது போர் குற்றங்கள் சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர் இந்த நிலைமையைத்...

இராணுவ ஓய்வு விடுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்

கிளிநொச்சி - திருநகர் பகுதியில் தனியார் காணியில் செவன் வில்லா (SevenVilla) இராணுவ ஓய்வு விடுதியில் இருந்த இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியை இராணுவம் தன்னுடைய பயன்பாட்டில் வைத்திருந்தது. எனினும் குறித்த காணி உத்தியோகபூர்வமாக காணி உரிமையாளரிடம் கையளிக்கப்பட வில்லை என குறிப்பிடப்படுகின்றது. மேலும், இந்த முகாமில் இருந்த இராணுவத்தினர்...
Loading posts...

All posts loaded

No more posts