திருடிய நகையை செய்த இடத்திலேயே விற்றவர் மாட்டினார்

அளவெட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய நகைகளை, செய்த இடத்திலேயே விற்பனை செய்ய முயற்சித்த நபரை யாழ்ப்பாணத்தைச் நகைக்கடைக்காரர் பிடித்து திங்கட்கிழமை (12) தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். மல்லாகம், கல்லாரைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளவெட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடியுள்ளார். திருடிய நகைகளை யாழ்ப்பாணத்திலுள்ள கடையொன்றில் குறைந்த விலைக்கு விற்க முற்பட்டுள்ளார். அந்த நபர் கொண்டு...

 இறுதி யுத்தத்தின்போது இலங்கை மீது அமெரிக்கப்படை தாக்கவிருந்தது

'இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, இலங்கை மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியம் இருந்தது. இது தொடர்பில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் சீனாவின் இராணுவத் தளபதியும் எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்று, இறுதி யுத்தத்தின் போது, புலிகள் இயக்கத்துடன் போரிட்ட 53ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். 35...
Ad Widget

கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பானை

கிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத்தளபதியாக இருந்து மரணமடைந்த லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவிக்கு, கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பானை விடுத்துள்ளனர். வட போர்முனையின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்து மரணமடைந்த கெங்காதரன் எனும் லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவி விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏழு வருடங்கள் இருந்ததாகவும், கலையழகன் பயன்படுத்திய கைத்துபாக்கியை தற்போதும்...

மின்சாரப் பிளக்குகள் மற்றும் சொக்கற்றுக்களுக்கான தேசிய தர நியமம்

மின்சாரப் பிளக்குகள் மற்றும் சொக்கற்றுக்களுக்கான தேசிய தர நியமம் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது இது தொடர்பான விதிகள் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பான தகவல்களை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். பொதுப்பயன்பாடுகளின் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க ' 13 அம்பயர்...

கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

தென் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பில் கர்நாடகத்தில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால் வடக்கு தமிழர்கள் மிகவும் கவலையுடன் காணப்படுகின்றனர். இதற்காக உடனடி தீர்வை இந்திய அரசாங்கம் முதலில் பெற்றுதர வேண்டும் என்று அவர்...

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப் போவதில்லை!

சம்பூரில் அனல்மின் நிலையமொன்றை அமைக்க போவதில்லை என, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் நீதிக்கான மையம், சம்பூர் அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த வியடம் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த...

விபத்தில் தாய் பலி: மகன் படுகாயம்

முல்லைத்தீவு, மாந்தைகிழக்கு வன்னிவிளாங்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன், மோட்டார் சைக்களில் மோதி விபத்துக்குள்ளானதில், குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் ஒருவர் பலியானதுடன் அவருடைய 14 வயது மகன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாள்புரம் வன்னிவிளாங்குளத்தைச் சேர்ந்த இரவிக்குமார் இன்பமலர் (வயது 38) என்ற...

மிரட்டிய சட்டத்தரணிக்குப் பிணை

மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரைத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்திய சட்டத்தரணியை 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளில் செல்ல, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், இன்று செவ்வாய்க்கிழமை (13) அனுமதியளித்தார். பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சட்டத்தரணி, பிறிதொரு சட்டத்தரணியூடான மன்றில் இன்று ஆஜராகிப் பிணை கோரினார். மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரை தொலைபேசி ஊடாக...

வெள்ளை வானில் மூவர் கடத்தல்: யாழ் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற வழக்கினை நிறைவு செய்து வெளியில் வந்த மூன்று இளைஞர்களை, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் வெள்ளை வானில் ஏற்றிச்சென்றுள்ளதால் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற கலவரத்தின் போது, யாழ்.நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறித்த வழக்கு, இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிமன்றில் நடைபெற்றது. குறித்த...

முகப்புத்தக பயனாளர்களுக்கு எச்சரிக்கை!

மிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான பேஸ்புக் வாடிக்கையாளர்கள் தற்போது புதிய பிரச்சனையில் சிக்குண்டுள்ளனர். பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியில் தங்களின் பேஸ்புக் கணக்கின் ஊடாக வைரஸ் ஒன்று பரவி வருகின்றது. குறித்த வைரஸ் ஆனது பேஸ்புகில் காணொளி இணைப்பை தமது டைம்லைனில் பகிர்ந்துள்ளதாக அறிவிப்பு செய்யும், குறித்த அறிவிப்பினை கிளிக் செய்யும் போது உங்கள் பேஸ்புக் கணக்கில் ஊடாக...

“புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது கிளர்ச்சிக்கு பிள்ளைகளை பயன்படுத்தவேண்டாம்“

உடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது. இந்நியமனத்தில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இல்லை என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் எஸ்.தியாகராஜா தெரிவித்தார். உடுவில் மகளிர் கல்லூரி புதிய அதிபர் நியமனம் தொடர்பில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில்...

இயற்கை கிருமிநாசினி மூலம் அல்லைப்பிட்டியில் விவசாயம்!

செயற்கை உரங்கள், கிருமிநாசினிகள் மூலம் மண் வளம், நீர் வளம் பாதிக்கப்படுவதுடன் மரக்கறி, பழங்கள் நஞ்சுத்தன்மையாகி வரும் சூழலில் இயற்கை உரங்கள், இயற்கை கிருமி நாசினிகள் மூலம் நஞ்சற்ற உணவு உற்பத்தியை மேற்கொண்டு வருகிறார் அல்லைப்பிட்டி விவசாயி ஒருவர். அண்மையில் யாழ் . பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் கண்காட்சியில் இயற்கை உரம், இயற்கை...

தியாக தீபம் திலீபனை மறக்கச் செய்யும் கம்பன் விழா!

செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர் தொடுத்த பார்த்தீபன், மெழுகுதிரியாக தன்னை உருக்கி, தமிழினத்தின் ஒளி விளக்காக மாறிய நாள்....

யாழ் பல்கலைக்கழக ராக்கிங் கொடுமையால் கல்வியை இடைநிறுத்திய மாணவன்!!

யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் பகிடி வதைக் கொடுமையினால் தனது பல்கலைக் கழக கல்வியினை இடை நிறுத்தி தினக் கூலிவேலைக்காக மாணவன் செல்லும் அவலம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பகுதியினைச் சேர்ந்த மாணவன் இந்த ஆண்டு முதலாம் ஆண்டில் ஆண்டில் இணைந்து கொண்டார் . இணைந்த நாட்கள் முதல் ஒரே பகிடிவதைக் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணத்தினால்...

“ஆதரவும் எதிர்ப்பும் நியாயமானது” :டேனியல் வசந்தன் (சாம்)

'கடந்த 2009 ஆம் சிரானி மில்ஸை நீக்கும் போது, அவர் பக்கம் நியாயம் இருந்தமையால் அவர் சார்பாக போராட்டம் செய்தேன். ஆனால், தற்போது அவருக்கு 60 வயதாகின்றமையால்> அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற நியாயத்தின் அடிப்படையில் அவருக்கு எதிராக செயற்படுகின்றேன்' என உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் டேனியல் வசந்தன் (சாம்) தெரிவித்தார். கச்சேரி -...

“அதிபர் பிரச்சினை தடம்மாறிச் செல்கிறது” : ஆயூப் அஸ்மீன்

“தென்னிந்திய திருச்சபைக்கு எதிரான வேறு சில கிறிஸ்தவ அமைப்புகள், சுமந்திரனின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத தமிழ் அரசியல்வாதிகள், உடுவில் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள், கல்லூரிக்கு எதிரானவர்கள், தமிழ் மக்களிடையே குழப்பங்கள் இருக்கின்றன என்று வெளிக்காட்ட நினைக்கும் பெரும்பான்மைமொழி ஊடகங்கள், தமிழர் அரசியலில் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆகியோரே, உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினைக்கு காரணம்” என வடமாகாண...

3225 பேருக்கு ஆசிரிய நியமனங்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்த 3225 பேருக்கு அடுத்த மாதம் 4ம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. 1046 தமிழ்மொழி ஆசிரியர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். இது தொடர்பான வைபவம் அலரிமாளிகையில் அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு இடம் பெறவிருப்பதாக கல்வி அமைச்சின் கல்வி சேவைகள் உள்ளக...

இலங்கையின் மெதுவான நடைமுறைகள் குறித்து சர்வதேச மன்னிப்பு சபை அதிருப்தி

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம், மேற்கொள்ளும் மெதுவான நடைமுறைகள் மற்றும் வெளிப்படைத் தன்மையில்லாமை என்பன குறித்து, மனித உரிமை காப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக, சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 33வது அமர்வில் சர்வதேச மன்னிப்பு சபை எழுத்துமூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்கூறப்பட்ட விடயங்கள் கூறப்பட்டுள்ளது....

முன்னாள் போராளிகள் விவகாரம்: ஐநாவுக்கு மனு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் விடயம் குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழக்கறிஞர்கள் அமையத்தினால் (Tamil Lawyers’ Forum) இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் மற்றும் வைத்தியர்கள் அடங்களாக இந்த குழுவை நியமிக்குமாறு, அவர்கள் கோரியுள்ளனர். சில...

உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியரது வீட்டின்மீது கல்வீச்சு

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் மாற்றம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவரது வீட்டின்மீது விசமிகளால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதியில் அமைந்துள்ள ஆசிரியர் சாம் என்பவரது வீட்டின் மீதே, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு...
Loading posts...

All posts loaded

No more posts