Ad Widget

மின்சாரப் பிளக்குகள் மற்றும் சொக்கற்றுக்களுக்கான தேசிய தர நியமம்

மின்சாரப் பிளக்குகள் மற்றும் சொக்கற்றுக்களுக்கான தேசிய தர நியமம் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது

இது தொடர்பான விதிகள் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பான தகவல்களை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

பொதுப்பயன்பாடுகளின் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க ‘ 13 அம்பயர் பிளக் மற்றும் சொக்கெற் அவுட்லெற் அதாவது சதுரமுனை என்று கூறப்படும் வகை பிளக் மற்றும் சொக்கற்றுக்களுக்கு இலங்கைக்கான தேசிய நியமனத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது’ என்று தெரிவித்தார்.

புதிய தர நியமம் தொடர்பான விதிகள் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார். 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதியிலிருந்து இந்த வகைக்குட்படாதவற்றை தயாரித்தல் மற்றும் இறக்குமதி செய்தல் விற்பனை ஆகியவற்றுக்காக ஒருவருட நிவாரண காலமும் வழங்கப்பட்டுள்ளது.

2017 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதியிலிருந்து G வகைக்கு உட்படாத அல்லது தேசிய நியமத்துக்கு உட்படாத பல்வேறு வகையான மின்சார பிளக் மற்றும் சொக்கெற் முதலானவற்றை இறக்குமதி செய்தல் தடைசெய்யப்படுகின்றது.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதியிலிருந்து G வகையைச் சேராத மற்றும் மின்சார நியமனம் உறுதிசெய்யப்படாத மின்சார உபகரணங்கள் விற்பனை செய்வது தடைசெய்யப்படுகின்றது.

அத்தோடு புதிய நியமம் குறித்த விதிமுறைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
தற்பொழுது பாவனையில் உள்ள, உள்ளக மின் கட்டமைப்பு மற்றும் இவ்வாறான மின்சார உபகணரங்களை மாற்றுவது தேவையற்றது. புதிய மின்சார கட்டமைப்புக்களை மேற்கொள்ளும் போது குறிப்பிடப்பட்ட G வகை மின்சாரஉபகரணங்கள் பயன்படுத்தபட வேண்டும்.

புதிய நியமம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் புதிதாக இவ்வாறான உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது 13 அம்பியர் என்பதை பரிசோதனை செய்யுமாறும் புதிய மின்சார கட்டமைப்புக்களை மேற்கொள்ளும் போதும் இவ்வாறானவற்றை பயன்படுத்துமாறும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related Posts