- Thursday
- May 7th, 2026
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, இன்று வெள்ளிக்கிழமை (09) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்தார். பலாலிக்கு விமானம் மூலம் வந்த ஜனாதிபதி, அங்கிருந்து உலங்கு வானூர்தியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தைச் சென்றடைந்தார். யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெறும், போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக...
சம்பூர் - நீலாங்கேணி பகுதியில் நான்கு வயது சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சந்தேகநபர் சம்பூர் - நீலாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் இன்று மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (8) காலை 9.00 மணியளவில் வீட்டிலிருந்த 4 வளது சிறுமி...
தெல்லிப்பளை பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் இருந்து அழுகிய நிலையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தெல்லிப்பளை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் இளவாலை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய முதியவரொருவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.எவ்வாறாயினும் , அவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இதேவேளை , கிளிநொச்சியில் ஆண் ஒருவரின்...
சுன்னாக பொலிசாருக்கு எதிராக சுன்னாக பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலளர்கள் இருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அது தொடர்பில் தெரியவருவதாவது , உடுவில் மகளீர் கல்லூரியில் அதிபர் மாற்றத்திற்கு எதிராக கடந்த 3ம் திகதி தொடக்கம் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்றய தினம் பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீள ஆராம்பமானது. அதன் போது...
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குறுதியையடுத்து பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று மாலை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மக்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட விஜயகலா மகேஸ்வரன் பாதுகாப்புச் செயலர் வழங்கிய வாக்குறுதியை மக்களுக்குத் தெரிவித்ததையடுத்து போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தன்னிடம் இன்னும் 15 நாட்களுக்குள் பரவிபாஞ்சான் மக்களின் ஒருதொகுதி காணி...
முன்னாள் போராளிகள் 26பேருக்கு முதற்கட்டமாக விச ஊசிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் இந்தச் சிறப்பு மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 முன்னாள் போராளிகளும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 7 முன்னாள் போராளிகளும், வவுனியா...
இராணுவத்தினரால் நடத்தப்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப் பணம் வடமாகாணக் கல்வி அமைச்சின் நிதியிலிருந்து சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றபோது, அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'கிளிநொச்சி இராணுவப் படைத் தலைமையகத்துக்குக் கடந்த 2013ஆம்...
பலாலி ஆரோக்கிய மாதா தேவாலய மணி நேற்று வியாழக்கிழமை திருட்டுப் போயுள்ளது. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மேற்படி ஆலயத்தின் பெருவிழாவுக்கு பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்கியிருந்தனர். கடந்த 26 வருடங்களின் பின்னர் மேற்படி ஆலயத்துக்கு பொதுமக்கள் மதவழிபாடுகளை மேற்கொள்ள படையினர் அனுமதி வழங்கியிருந்தனர். இந் நிலையில் 2010 ஆம் ஆண்டு ஆலயத்தினை பார்வையிடுவதற்கும்,...
'நாவற்குழி கிழக்கில் உள்ள காணியொன்றினுள் இருந்து இரண்டு குண்டுகள் இன்று நேற்று வியாழக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளன' என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். முன்னர் இராணுவ முகாமாக இருந்து விடுவிக்கப்பட்ட 3 ஏக்கர் காணியை துப்புரவு செய்யும் பணிகள் புதன்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது, காணிக்குள் குண்டுகள் இருப்பது இனங்காணப்பட்டு, அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இராணுவம்...
திருகோணமலை - சம்பூர் - நீலாங்கேணி பகுதியில் நான்கு வயது சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவருடையது என, அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (8) காலை 9.00 மணியளவில் வீட்டிலிருந்த சிறுமி காணாமல் போயுள்ளதாக தெரியவந்ததையடுத்து, தேடுதலில் ஈடுபட்ட கிராம...
புனர்வாழ்வு பெறாத 275 முன்னாள் போராளிகள் வடக்கில் சுதந்திரமாக உலாவருவதாகவும், அவர்கள் தாமாக முன்வந்து சரணடையாத போதிலும் அவர்களால் தேசிய பாதுகாப்புக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். பலாலி இராணுவப் படைத் தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்றில் கலந்து...
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமானநிலையமாக மாற்றும் நடவடிக்கைக்காக பலாலி விமானநிலையத்தை இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்திய விமான நிலைய அதிகாரசபை, சாத்திய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதன்படி புனரமைப்புக்குத் செலவாகும் நிதி மற்றும் அதன் வரைபினையும் அக்குழு அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. இந்நிலையில், தற்போது பலாலி விமானநிலையம் பிராந்திய விமானநிலையமாக மாற்றப்படாது எனவும், அதற்கு அரசாங்கத்திடம்...
வடக்கில் மீண்டும் சாதி, பேதம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக வடக்குமாகாண மக்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீண்டும் தேடுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போது, வடக்கில் சாதி, பேதம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் வடக்கு மாகாண மக்கள் தன்னிடம் தலைவர்...
உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்த 3 ஆம் திகதி முதல் மாணவிகள் மற்றும் நிர்வாகத்துக்கும் இடையில் நிலவிய முரண்பாடு, இன்று (08) முடிவுக்கு வந்ததுள்ளது. 'நான் விட்டுக்கொடுக்கிறேன், எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக எனது அனைத்துக் கடமைகளையும் ஒப்படைப்படை க்கிறேன்' என முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் அறிவித்ததையடுத்து, பிரச்சினை முடிவுக்கு வந்தது. திங்கட்கிழமை (12) விடுமுறை...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நிர்வாகம் சுமூகமான தீர்வினை எடுக்காவிடின் உடுவில் மகளிர் கல்லூரியை அரச பாடசாலையாக சுவீகரிப்பதற்கு வடமாகாண சபை அரசாங்கத்திடம் கோரும் நிலை ஏற்படுமென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்கள் கடந்த 4 நாட்களாக முன்னாள் அதிபரை மாற்றுவதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமாகாண...
கிளிநொச்சி - பரவிப்பாய்ஞ்சான் கிராமத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஒரு வாரமாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்டவர்கள், தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று, இரண்டாவது நாளாக இந்தப் போராட்டம் தொடர்கின்றது. பரவிப்பாய்ஞ்சான் கிராமத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், அவைகள் முழுமையாக...
வன்னியில் போரை முன்னின்று நடாத்திய இராணுவத் தளபதிகளில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவும் ஒருவர். அவர் இப்போது, 'பிரபாகரன் அவர்கள் உயர்ந்த பட்ச ஒழுக்கம் கொண்டவர். சேகரிக்கப்பட்ட அவர் தொடர்பான பத்தாயிரம் புகைப்படங்களில் எந்த ஒரு படத்திலேனும் மதுபானக் குவளையுடன் அவர் காணப்படவில்லை. பெண் போராளிகளை அவர் தவறாகப் பயன்படுத்தியமைக்கான எந்தவித சான்றாதாரங்களும் இல்லை' என்று...
குருநாகல், மாளிகாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வைத்து, யாசகர் ஒருவர் மீது காறித் துப்பிய யுவதி ஒருவரை, அங்கிருந்த இளைஞர்கள் சிலர், சரமாரியாகத் தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவொன்று, சமூக வலைத்தளங்களில் தற்போது உலா வருகின்றன. சம்பவத்தின் போது, பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த...
Loading posts...
All posts loaded
No more posts
