- Friday
- August 14th, 2026
வவுனியா உட்பட வடக்கு மாகாணத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் நடாத்திவருவதால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிகையலங்கரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிகையலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீபன் கருத்துத் தெரிவிக்கையில், வவுனியாவில், பம்பைமடு மற்றும் நாம்பன்குளம் ஆகிய பிரதேசங்களில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் நடாத்தி வருகின்றனர். நாங்கள் பரம்பரை...
கட்டிட நிர்மாணப் பணிகளில் மோசடிகளைத் தடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாண நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், கட்டிட நிர்மாணப் பணிகளில் மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அதனை தடுப்பதற்கோ அல்லது தண்டனை வழங்குவதற்கோ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலேயே அவர்கள் இன்று வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனால் நாட்டின் ஒழுக்கம் கெட்டுப்போயுள்ளதாகவும், அரசாங்கம் தமக்கு எதிரான அரசியல்வாதிகளை அவ்வப்போது கைதுசெய்து வருவதாகவும் குறறம் சுமத்தினார். நாட்டில் தற்போது காட்டுச் சட்டமே அமுலில் உள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற...
42 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவி புதிய சாதனை படைத்துள்ளார்.42 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் 29 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில், ஜெகதீஸ்வரன் அனித்தா 3.41 மீற்றர் உயரத்தை தாண்டி இலங்கை தேசிய மட்ட சாதனையை முடியறித்துள்ளார்....
“2016ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், வடக்கிலிருந்து 2,291 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” என்று, வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதில் அதிகளவான நோயாளர்கள், யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களின் எண்ணிக்கை, 1,753ஆகப் பதிவாகியுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார். “அத்துடன், வவுனியாவில் 212, முல்லைத்தீவு மாவட்டத்தில் 150, மன்னாரில் 108,...
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அனைவரும், கட்டாயமாக ஆங்கில மொழி அறிந்திருக்க வேண்டுமென்ற நிபந்தனையை அமுல்படுத்த எதிர்ப்பார்ப்பதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்தார். இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவோருக்கான ஆங்கிலப் பயிற்சிநெறியொன்றை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக, அவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மஹிந்த கதைத்தாரா? என்று, சில அமைச்சர்களிடம் விசாரணை நடத்தப்படுவதிலிருந்தே, தனக்கு அந்தச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், நேற்று வெள்ளிக்கிழமை (30), அவன் காட் ஆயுத கப்பல் தொடர்பான வழக்கு இடம்பெற்றது. இந்த வழக்கில்...
யாழில் பொதுமகனைத் தலைக்கவசத்தால் தாக்கிய குற்றத்திற்காக 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குமாறு இரண்டு பொலிசார் மீது யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ் சதீஸ்குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆவணி மாதம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரண்டு பொலிசார், மதுபோதையில் சென்று கடையொன்றில் 100 ரூபாவை கொடுத்து 04 சிகரட் தருமாறு கோரியுள்ளனர். அதற்கு...
யுத்தத்திற்கு பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கம் எமக்கான எந்த உதவிகளையும் செய்யவில்லை. மாறாக இங்கு மேற்கொள்ளப்பட்ட சில அபிவிருத்திகளை கூட எம்மோடு கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகவும் மத்தியில் உள்ளவர்களை கொண்டு வடக்கை சேர்ந்தவர்களை புறக்கணித்து மேற்கொண்டு வந்துள்ளது. என சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அரசாங்க நிர்மாண...
இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்டியிருப்பதாகத் தெரிவித்து அவருக்கு எதிராகக் கண்டனப் பேரணியொன்று நேற்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற்றுள்ளது. வவுனியா மாவட்டத்தின் எல்லைப்புறமாகிய போகஸ்வௌ பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிங்கள மக்களுடன், பொதுபலசேனா, இராவணா பலய உள்ளிட்ட பௌத்த கடும்போக்கு அமைப்புக்களைச் சேர்ந்த பௌத்த மதக் குருக்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்....
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் உள்ளிட்ட எட்டுப் பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். எவன்காட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நாளை 30ஆம் திகதி வவுனியாவில் முன்னெடுக்கவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. நாட்டை இரத்தக் காடாக்க வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுக்கும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே...
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனவர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர், இன்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளனர். பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.கெமிடோன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, முன்னாள் போராளிகளை குடும்பத்துடன் இணைத்து வைத்தார். இதன்போது, புனர்வாழ்வு நிலையத்தினை சேர்ந்த பயிலுனர்கள் மற்றும் அந்நிலையத்தில் பணியாற்றும் இராணுவ...
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் பட்டியல் தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் முரண்பட்டத் தகவல்களை வெளியிட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி நீதிமன்றில் எடுத்துரைத்துள்ளார். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் யுத்த வலயத்தில் வைத்து ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல்...
விவசாயத்திற்கு பாதிப்பு விளைவிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 18 கமக்கார அமைப்புக்களுக்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசன் துப்பாக்கிகளை வழங்கிவைத்தார். 2016ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 5 இலட்சம் பெறுமதியான 18 துப்பாக்கிகளை 18 கமக்கார அமைப்புக்களுக்கு நேற்றையதினம் (புதன்கிழமை) முள்ளியவளை கமநலசேவை திணைக்களத்தில் வைத்து வழங்கினார். அண்மைக்காலமாக குரங்குகளின்...
யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட அருணாச்சலம் குகணேஸ்வரன் என்பவருக்கு, மரண தண்டனை வழங்கி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது .. இந்த வழக்கு விசாரணைக்காக 28 ஆம் திகதி புதன்கிழமை எடுத்துக்...
பாடசாலை செல்லும் 16 வயது மாணவனை தொண்டைமானாறு அக்கரைப் கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று, மாணவனை மதுபானம் அருந்த வைத்து ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களை நிபந்தணை பிணையில் செல்ல பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், புதன்கிழமை (28) அனுமதியளித்தார். சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா 5 இலட்சம்...
விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப் பகிர்வுப் பத்திரம் சட்ட வலுவற்றது. எனவே, அந்த விதிகள் சட்ட வலுவற்றது என தீர்ப்பளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என விடுத்த வேண்டுகோளை பரிசீலனை...
மண்டூர் முருகன் ஆலய நிர்வாகப் பொறுப்பதிகாரிக்கு ஆலயம் சார்ந்தோர் ஒத்துழைக்க வேண்டும் இந்த வழக்கில் விசேட நியமனம் பெற்றுள்ள நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல் மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலய நிர்வாகச் செயற்பாடுகள் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு பிரதம நீதியரசரினால் நியமனம் செய்யப்பட்டுள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், இந்த ஆலயத்தின் கணக்கு வழக்குகள், நிர்வாகம்...
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
