இலங்கையின் மெதுவான நடைமுறைகள் குறித்து சர்வதேச மன்னிப்பு சபை அதிருப்தி

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம், மேற்கொள்ளும் மெதுவான நடைமுறைகள் மற்றும் வெளிப்படைத் தன்மையில்லாமை என்பன குறித்து, மனித உரிமை காப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக, சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 33வது அமர்வில் சர்வதேச மன்னிப்பு சபை எழுத்துமூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்கூறப்பட்ட விடயங்கள் கூறப்பட்டுள்ளது....

முன்னாள் போராளிகள் விவகாரம்: ஐநாவுக்கு மனு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் விடயம் குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழக்கறிஞர்கள் அமையத்தினால் (Tamil Lawyers’ Forum) இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் மற்றும் வைத்தியர்கள் அடங்களாக இந்த குழுவை நியமிக்குமாறு, அவர்கள் கோரியுள்ளனர். சில...
Ad Widget

உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியரது வீட்டின்மீது கல்வீச்சு

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் மாற்றம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவரது வீட்டின்மீது விசமிகளால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதியில் அமைந்துள்ள ஆசிரியர் சாம் என்பவரது வீட்டின் மீதே, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு...

பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரிப்பு

நாட்டிலுள்ள பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், இலங்கையில் தற்போது மதுபானம் மற்றும் சிகரெட் பாவனை குறைவடைந்துள்ளதாகவும், எனினும் போதைப் பொருள் கொண்டுவரும் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே...

வடக்கு விவசாய அமைச்சால் விவசாயக் கிணறுகள் புனரமைப்பு

வடமாகாண விவசாய அமைச்சால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இன்று திங்கட்கிழமை (12.09.2016) யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகவும், போதிய பராமரிப்பு இல்லாமலும் யாழ் குடாநாட்டில் உள்ள...

வலி வடக்கில் மேலும் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க அனுமதி

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மேலும் 700 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் இணங்கியுள்ளதாக யாழ்.அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை, கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் ஆகிய பிரதேசங்களில் காணப்படும் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சுமார் 26 வருடங்களுக்கு மேல் இராணுவத்தினரின் பிடியில் காணப்படும் வலி வடக்கின்...

முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் இந்த வாரமும் மருத்துவ பரிசோதனை

வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் இந்த வாரமும் மேற்கொள்ளப்படவுள்ளன. வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட வைத்தியசாலைகளிலும் கடந்த 2 ஆம் மாற்று 9 ஆம் திகதிகளில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி மீண்டும் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை இடம்பெறவுள்ளதாக...

யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அரசியல் கைதிகளின் உறவினர்களினால் துண்டுப் பிரசுர விநியோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைகப்பட்டுள்ள அரசியல் கைதிகளை...

குருநகர் யுவதி தீக்குளிப்பு!

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த யுவதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்பாணம் - குருநகரில் உள்ள ஓடக்கரை வீதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது மகள் சரோன் கருண்சி (வயது 27). இவருக்கும், இலங்கையை சேர்ந்த டாக்டர் நவனீதராஜ் (31) என்பவருக்கும் திருமணமாகி ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். சரோன்...

வட மாகாணத்தில் 119 மூலம் தமிழில் கதைக்கலாம்

தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க முடியுமான விதத்தில், தமிழ் மொழியில் கதைப்பதற்கான ஏற்பாடுகளை 119 அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்தினூடாக செய்து கொடுத்துள்ளதாக வட மாகாண பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது. பொலிஸுக்கு வருகை தரும் எந்தவொருவரும் தமது பாஷையில் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவகாசம் செய்து கொடுக்க வேண்டும் என்ற பொலிஸ் மா அதிபர்...

யாழ் குடாநாட்டில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் விரைவில் முடிவுறுத்தப்படும்

யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற போதைப் பொருள் கடத்தல் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் அடாவடித்தனமான குற்றச் செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார். போதைப் பொருளை ஒழித்தல், யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு விழா, யாழ் புதிய பொலிஸ் நிலையக் கட்டிடத்...

தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் இன்று

உலகலாவிய ரீதியில் வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவரும் இன்று (திங்கட்கிழமை) தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர். இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையில் புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இத் தினத்தில் ஹஜ் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் உழ்ஹிய்யா கடமையையும் நிறைவேற்றுவார்கள். ஹஜ் பெருநாளை முன்னிட்டு உலகின் அனைத்து...

நிலையான சமாதானத்தை ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் : சம்பந்தன்

நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவற்கு பேதங்களை மறந்து அனைவரும் முன்வர வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- ”புனித ஹஜ் பெருநாளானது தன்னலமற்ற தியாகத்தை...

யாழில் பாரதியார் நினைவுநாள்

பாரதியார் நினைவுதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்திருக்கும் பாரதியார் சிலையானது இளைஞர்களால் சுத்திகரிக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு சுட்டி விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பாரதியார் உருவம் பொறிக்கப்பட்ட மேலாடைகளுடன் தனி நபர்களாக முன்னின்று பாரதியாரை நினைவுகூர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நினைவாக இலவசமாக பொது மக்களுக்கு மரக்கன்றுகளையும் இளைஞர்கள் வழங்கியுள்ளார்கள். இவ்வாறான நடவடிக்கைகளில் இக்கால சந்ததியினர் ஈடுபடுவது தமிழின்...

பதியாத இணையத்தளங்களைகட்டுப்படுத்த முஸ்தீபு

சகல இணையத் தளங்களையும் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில், கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தொடர்பில் ஆராயப்பட்டதாக அறியமுடிகின்றது. தற்போது செயற்பாட்டில் உள்ள இணையத்தளங்களை கணக்கிடமுடியாதுள்ளதாகவும் நிறுவனங்கள், அமைச்சுக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் என்றடிப்படையில்...

‘சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பேன்’: சி.வி வாக்குறுதி

உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினை தொடர்பில் சட்டத்துக்கு உட்பட வகையில் தன்னாலான சகல நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்ததாக, போராட்டம் நடத்தும் தரப்பினர் தெரிவித்துள்ளனர். உடுவில் மகளிர் கல்லூரி அதிபரான சிராணி மில்ஸை, பாடசாலையின் ஆளுநர் சபை நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 3ஆம் திகதி தொடக்கம் பாடசாலை மாணவிகள் சிலரும் பெற்றோர்களும்...

கொழும்பு பல்கலை வைத்திய பீட மாணவன் சடலமாக மீட்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த வைத்திய பீட மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருவாத்தோட்ட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 28 வயதான அந்த வைத்தியரின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயிரிழந்த மாணவன் பரீட்சையில் தோல்வியடைந்தமையால் ஏற்பட்ட மன உளைச்சலினாலேயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, பொலிஸாரின்...

சாரணியம் இயற்கையை நேசிக்கக் கற்றுத்தருகிறது: பொ.ஐங்கரநேசன்

சாரணர்களின் பாசறை நிகழ்ச்சிகள் அவர்களுக்கு ஏராளமான விடயங்களை இளவயதிலேயே கற்றுத்தருகின்றன. பாடசாலையை விட்டு வெளியே இயற்கைச் சூழலில் நடாத்தப்படும் பாசறைகள் மாணவர்களிடையே இயற்கை பற்றிய புரிதலை ஏற்படுத்தி, இயற்கையை நேசிக்கக் கற்றுத் தருகிறது என்று வடக்கு சுற்றுச் சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ் இந்துக்கல்லூரியின் சாரணர் நூற்றாண்டு விழாவையொட்டி யாழ் இந்துக்கல்லூரியின் திரிசாரணர்களால் வவுனிக்குளம்...

கல்முனையில் பூமியதிர்ச்சி !!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதியில் நேற்று இரவு 9.00 மணியளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதில் வீடுகளுக்கும் கட்டிடங்களுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டதுடன் நிலங்களிலும் சிறு,சிறு வெடிப்புக்களையும் காணக் கூடியதாகவுள்ளது . இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. சிறிது நேரத்தில் பொலிஸாரும் அப்பகுதிக்கு வந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர்....

சுன்னாகம் பொலிஸாரின் அசமந்தம் ; மனித உரிமை ஆணைக்குழு விளக்கம் கோரல்

யாழ்ப்பாணம் உடுவில் மகளீர் கல்லூரியில் மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது சுன்னாகம் பொலிசாரின் அசமந்தப் போக்கு மற்றும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தினால் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி முதல் உடுவில் மகளீர் கல்லூரி மாணவர்களால்...
Loading posts...

All posts loaded

No more posts