Ad Widget

குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் சதித்திட்டங்களை கூட்டமைப்பு வேடிக்கை பார்க்கின்றது: சுரேஷ்

வடக்கின் குடிப்பரம்பலை முழுமையாக மாற்றியமைத்து தமிழர்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் நடவடிக்கைகள் ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசாங்கமும் தனது இராணுவ மற்றும் அரச இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வருவதாக தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினரும், ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தமிழருக்கு எதிரான இந்த திட்டமிட்ட சதித்திட்டங்களுக்கு எதிராக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதனையும் பேசாது மௌனம் காத்து வருவதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.

வவுனியாவில் இன்று ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் அலுவலகமொன்றை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

வவுனியா தேக்கவத்தை பகுதியிலேயே இன்று ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் புதிய அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே ஒரே வழி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts