Ad Widget

வடக்கில் 2,291 டெங்கு நோயாளர்கள்: யாழில் உச்சம்

“2016ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், வடக்கிலிருந்து 2,291 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” என்று, வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதில் அதிகளவான நோயாளர்கள், யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களின் எண்ணிக்கை, 1,753ஆகப் பதிவாகியுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.

“அத்துடன், வவுனியாவில் 212, முல்லைத்தீவு மாவட்டத்தில் 150, மன்னாரில் 108, முல்லைத்தீவில் 68 பேர் என, டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” எனவும் அவர் கூறினார்.

“எவ்வாறாயினும், வடக்கின் சலக மாவட்டங்களிலும், மாவட்டச் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை கண்டறிவது தொடர்பில், பிரதேச மக்களுக்கு வீடு வீடாகச் சென்று தெளிவுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று, வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.கேதீஸ்வரன், மேலும் தெரிவித்தார்.

Related Posts