Ad Widget

வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்க்க முடியாது

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக எவரும் போர்க்கொடி தூக்க முடியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“வடக்கு, கிழக்கு இணைப்பை எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தார். வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஏற்கெனவே இணைந்திருந்த கட்டமைப்பு. அதனால் அது இணைவதற்கு எதிராக எந்தவொரு முஸ்லிமோ, சிங்களவர்களோ போர்க்கொடி தூக்கத் தேவையில்லை.

வடக்கு, கிழக்கு இணைப்பின் ஊடாகத் தான், தமிழ் இனத்தின் மொழி, கலாசாரம் என்பவற்றை காக்க முடியும். கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக இடம். இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் மிகக்குறுகிய அளவில் கிழக்கு மாகாணத்தில் இருந்த சிங்கள இனம், இன்னு 26 தொடக்கம் 30 வீதம் அளவுக்கு விரிவடைந்துள்ளது. 1965 – 1970ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களே இதற்கு காரணம்” என்றார்.

Related Posts