- Sunday
- August 16th, 2026
வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கில் பணியாற்றும் விவசாயப் போதனாசிரியர்களுக்குத் தமிழகத்தில் திறன் விருத்திப் பயிற்சி நடைபெறவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் இயங்கும் தேசிய வேளாண் நிறுவனத்தின் மூலம் இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (25.11.2016) விவசாய அமைச்சின் அலுவலகத்திலும் திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்திலும் இடம் பெற்றுள்ளது....
வடக்கில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கட்டுப்பாட்டிலுள்ள மாவீர்ர் துயிலும் இல்லங்களை விடுவிக்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள மாவீர்ர் துயிலும் இல்லங்களையே விடுவிக்குமாறு நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான காணி அமைச்சு தொடர்பான குழு நிலை...
தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் கைலாசபதி கலையரங்கின் நுழைவாயில் சிவப்பு, மஞ்சள் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு, தலைவர் பிரபாகரனின் படம் வைக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் கேக்கில் மேதகு பிரபாகரன் என எழுதப்பட்டு 62 ஆவது மெழுகு திரி கொழுத்தப்பட்டுள்ளது.
“ஊர்காவற்றுறையில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியபோது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மெய்ப் பாதுகாவலர்களாக இருந்த எம்மிடமும் துப்பாக்கிகள் இருந்தன. அதனை நாம் பயன்படுத்தியிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும். ஆனால், அதனை பாவிக்க வேண்டாம் என மாவை சேனாதிராஜா எம்மைத் தடுத்துவிட்டார்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்றுறையில் வைத்து தாக்குதல்...
2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்போதைய காலப்பகுதியில் ஊர்காவற்துறை நீதிமன்றில், பூர்வாங்க விசாரணையின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் வழங்கிய சாட்சி மேல் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (25) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நேற்று (25) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது? குறித்த சம்பவம்...
யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தெரிவித்தார். ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் போதுமான முன்னேற்றங்கள் இல்லாதமையால் இத்தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், அனைத்து ஊழியர்களும், திங்கட்கிழமை (28) காலை 8.30 மணியளவில் இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறும்...
தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த இரு அமைப்புகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றுப்பட்டு செயல்பட முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்...
உயிர்நீத்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதும் அஞ்சலி செலுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். இதனை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார். கடந்த 21ஆம் திகதி முதல் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நாளை மாவீரர் தின நினைவேந்தல்களை நடத்த எதிர்ப்பார்த்துள்ள நிலையில், அரச தரப்பில்...
இலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் 40% வீதமானோர் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்கள என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய சமூக நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு செயற்றிட்டத்தின் ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு வௌிநாடுகளில் தொழில் புரிந்துவிட்டு மீண்டும் நாடு திரும்புபவர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைப்பின் பணிப்பாளரும்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கும், அரச சேவைத் துறைக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள இழப்புக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதிலுமுள்ள சகல அரச வைத்தியசாலைகளினதும் முன்னாள் இந்த...
அரச ஊழியர்களின் பதவியுயர்வுக்கு புதிய முறைமையொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை காலமும் சேவைக் காலத்தை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டு வந்த பதவி உயர்வுகள், எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு இப்பதவியுயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். அரச சேவையை நவீனமயப்படுத்தும் வேலைத்...
நாம் சாதாரண சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். மாறாக சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுக்கும், இராணுவ அடக்குமுறைகளுக்குமே எதிரானவர்கள் என வடமாகண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான...
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் திணைக்கள வளாகத்தில் வைத்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்கரை வீதியிலுள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவரின் மூன்று லட்சம் ரூபா பெறுமதியிலான மோட்டார் சைக்கிளை அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த நிலையில்...
கிளிநொச்சி முழங்காவிலில் துயிலுமில்லத் துப்பரவுப் பணிகள் நேற்றுமாலை நடைபெற்றுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ள அவர்களும் கலந்துகொண்ட இந்தத் துப்பரவுப் பணியில் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைத் துப்பரவும் செய்யும் பணிகள் நேற்று காலை கனகபுரம் துயிலுமில்லத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை முழங்காவில் துயிலுமில்லத்தில் துப்பரவுப் பணிகள்...
தலவாக்கலையில் உள்ள பிரபல சிங்கள பாடசாலை ஒன்றின் மாணவனை இந்தெரியாத நபர்கள் தாக்கி அம் மாணவனின் கையில் 'தமிழ்' என ஆங்கில எழுத்துக்களால் பிளேட் ஒன்றினால் கீறியுள்ளனர். தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த தரம் பத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனே இவ்வாறு தாக்குதலுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் பாடசாலை முடிவடைந்து வீட்டுக்கு...
எதிர்வரும் 2017ஆம் ஆண்டு தேசிய புத்தாண்டுக்கு முன்னர் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவை இரவுப் பூங்காவாக மாற்றுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார். மிருகங்களை கூடுகளில் அடைத்து வைக்காது, அவை சுதந்திரமாக நடமாடும் வகையில் இந்த விலங்கியல் பூங்கா மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர்...
யாழ்.மாவட்டத்தில் பகல் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 பேரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 21 பவுண் நகைகள், ஒரு மடிகணனி, டிஜிட்டல் கமரா ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகயன் தலைமையில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று 12.00 மணியளவில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்களினால் மாவீரர்களை நினைவுகூர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. எதிர்வரும் 27 ஆம் திகதி தமிழினத்தின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய வீரர்களின் நினைவுநாள்...
இலங்கையில் நாளொன்றுக்கு, 1100-1200 வரையில் சிசுக்கள் பிறக்கும் அதேவேளையில், 700-800 வரையிலான கருக்கலைப்புச் சம்பவங்களும் இடம்பெறுவதாக, தென் மாகாண சுகாதார திணைக்களத்தின் தொற்றுநோய் பிரிவுக்கான வைத்தியர், நளனி விஜேசேகர தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “இலங்கையில் கருக்கலைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாளொன்றுக்கு...
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியர் பிரதீப் சந்திரருவன் சேனாதீரவைக் கைதுசெய்வதற்கான சர்வதேசப் பிடியாணையை கம்பஹா நீதவான் இன்று பிறப்பித்துள்ளார். இந்த இணையத்தள ஆசிரியர்; விமான நிலையத்தை வந்தடையும் வேளையில் கைதுசெய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கம்பஹா நீதவான் உத்தரவிட்டார்.
Loading posts...
All posts loaded
No more posts
