கொலை சந்தேகநபருக்கு வழங்கிய பிணை இரத்து

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்துச் செய்து வழக்கு நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்றயதினம் (28) உத்தரவிட்டுள்ளார். யாழ் நகரப் பகுதியில் வசித்து வந்த தேவராஜா என்ற குடும்பஸ்தர் தனது வீட்டில் அப் பகுதியை சேர்ந்த ரவி என்பவரை குடியேற்றியிருந்தார். இந்தநிலையில் கடந்த...

ஒன்றாக போரிட்டிருந்தால், முழு இலங்கையையுமே பிடித்திருக்க முடியும் : கருணா

“ஆரம்பத்தில் ஒன்றாகச் சேர்ந்து போரிட்டிருந்தால், வடக்கு, கிழக்கை அல்ல, முழு இலங்கையையுமே பிடித்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செயற்பட்டு, தனிநாடு எடுப்பதை இந்தியா விரும்பவில்லை. அதேபோன்று தமிழர்கள் ஒன்றாகுவதையும் இந்தியா விரும்பவில்லை” என, மீள்குடியேற்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். “எங்கள் தமிழுக்காக, தமிழ் மண்ணுக்காக மடிந்தவர்களை நினைவுகூரவேண்டியது, தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்”...
Ad Widget

இலங்கையில் ஐ.எஸ்தீவிரவாதிகள்!! றோ எச்சரிக்கை!

இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பாக, இந்திய உளவுப் பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கைக்கு பயணம் செய்ய இந்திய வர்த்தகர் ஒருவர் உதவியதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும். ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத...

ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு வடக்கு தமிழ் மக்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளனர்

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியழுப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிகளுக்கு வடபகுதி மக்கள் முழுமையாக ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பிருமான இராமநாதன் அங்கஜன் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர், கடந்த இரண்டு தேர்தல்களிலும் யாழ். மக்கள் ஜனாதிபதிக்கு வழங்கிய ஆதரவினை...

நிர்வாகச் செயற்பாடுகளில் அனுபவம் இன்மையே பின்னடைவிற்கு காரணம்

தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை சமரசம் செய்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளில் ஒன்றான வடக்கு மாகாண சபையின் செயற்பாடு விமர்சனங்களுக்கு உள்ளாவதற்கு சபை உறுப்பினர்களின் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பான அனுபவம் இன்மையே பிரதான காரணம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அவைத்...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு இரட்டிப்பாக அதிகரிப்பு!

சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வதற்கு 1 லட்சம்ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தற்போது நாளொன்றுக்கு வழங்கப்படும் 500 ரூபா கொடுப்பனவு, 2500 ரூபாவாக அதிகரிக்கதீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து விரைவில் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சினால்நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஒரு மாதத்தில் இடம்பெறும் நாடாளுமன்ற...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

மணல் கடத்தல்காரர்களுடன் தொடர்பினை பேணி, அவர்களின் நடவடிக்கைக்கு ஆதாரவாக செயற்பட்டு வந்த, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நிர்வாகப்பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடந்த நான்கு வருடங்களாக நிர்வாக பிரிவில் கடமையாற்றி...

புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 09ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சறோஜினி இளங்கோவன் உத்தரவிட்டார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்று திங்கட்கிழமை (28) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 12 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் புதிய முறை

இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பின்னர், பயிற்றப்பட்ட பணியாளர்கள் மட்டுமே வெளிநாட்டு தொழில்களுக்கு அனுப்பப்படுவார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நீராடச் சென்ற இளைஞர் பலி

நாவற்குழி புகையிரத பாலப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 6 மணியளவில் நீராடச்சென்ற இளைஞன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த ஜேசுதாசன் அமிர்னதாப் (வயது 20) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். 2 இளைஞர்கள் ஒன்றாக நீராடச் சென்றிருந்த நிலையில், மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சடலத்தை மீட்ட...

இன்று முதல் உணவுப் பாதுகாப்பு வாரம்

அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் பணிப்புரையின் பேரில் உணவுப் பாதுகாப்பு வாரம் இன்று முதல் எதிர்வரும் 3ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தூர இடங்களுக்கு பயணிக்கும் பஸ்கள் நிறுத்தும் இடங்களிலுள்ள உணவகங்களில் இக் காலப் பகுதியில் விஷேட சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, குடி...

O/L பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர்களில் 50 ஆயிரம் பேருக்கு தே.அ.அட்டை இல்லை

இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களில் சுமார் 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இதுவரை தேசிய ஆள் அடையாள அட்டை பெறாதுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தே. அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக இன்று (28) விசேட நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை முடக்குவதற்கு திறைமறைவில் சதிகள்

வரும் ஒரு சில மாதங்களிற்குள் ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அதனை எதிர்க்கும் அமைப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திகழ்வதால் தமது கட்சியை முடக்கும் திரைமறைவுச் சதிகள் நடைபெற்றுவருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று (27) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் தலைமையகத்தில் மாலை 06.05 மணிக்கு...

ஞானசார தேரரை விமானநிலையத்தில்வைத்தே திருப்பி அனுப்பியது இந்தியா!

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலர் அத்தே ஞானசார தேரரை இந்திய விமானநிலையத்தில் வைத்தே இந்தியக் குடிவரவு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். இலக்கிய விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஞானசார தேரர் கடந்த 25ஆம் திகதி இந்தியா புறப்பட்டிருந்தார். எனினும், அவர் இந்திய அதிகாரிகளால் நாட்டுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படாமையினால் அன்றே குடிவரவு அதிகாரிகளால் நாட்டுக்குத்...

கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களின் பெயர் பட்டியல்

2015 - 2016 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்பட உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் இன்று முதல் பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில் : வைத்திய பீடம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் பட்டியல்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ...

இழந்தவற்றை மீளப் பெற கல்வியே சிறந்த வழி

கல்விக்கு பெயர்போன யாழ்ப்பாணம் கடந்த மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக பலவற்றை இழந்துள்ளதென குறிப்பிட்டுள்ள வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு கல்வியில் தேர்ச்சி பெறுவதோடு, அபிவிருத்திகளையும் முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். யாழ்.வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களுக்கான வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) யாழ். இராமநாதன்...

ரயில் நிலையத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ஆணின் சடலம், வெள்ளிக்கிழமை (25) மாலை மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர் ரீ.பிரதீபன் தெரிவித்தார். மேற்படி நபர், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த யாழ். தேவி ரயியில் பயணித்துள்ளதாகவும் களைப்பு காரணமாக ஓய்வெடுத்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளை குற்றச்சாட்டில் பாடசாலை மாணவன் பிணையில் விடுவிப்பு

வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் தங்கச்சங்கிலியை கொள்ளையடிக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பிரதேச இளைஞர்களால் மடக்கிப்பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பாடசாலை மாணவனை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்வதற்கு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் சனிக்கிழமை (26) அனுமதி வழங்கினார். மேலும் குறித்த சம்பவம் தொடர்புடைய வழக்கை, எதிர்வரும் 02ஆமி திகதிக்கு...

குடு பேபி கைது

180 மில்லிகிராம் குடு வைத்திருந்த குற்றச்சாட்டில் குடு பேபி என அழைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் வைத்தியசாலை வீதியில் வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் சனிக்கிழமை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். யாழ். ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் கொள்ளையிடப்பட்ட துவிச்சக்கரவண்டியில் குடு விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். இதன்போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அவர்...

வாள் வெட்டுக்கு இலக்கானவரை அடையாளம் காண மக்கள் உதவியை நாடும் பொலிஸார்

கல்லூண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடர்பில், எந்தத் தகவலையும் பெறமுடியாத நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.என்.டி ஜெயவீர, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். 45 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் கடந்த 16ம் திகதி இரவு கல்லுண்டாய் வெளிபகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான...
Loading posts...

All posts loaded

No more posts