நீராடச் சென்ற இளைஞர் பலி

நாவற்குழி புகையிரத பாலப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 6 மணியளவில் நீராடச்சென்ற இளைஞன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த ஜேசுதாசன் அமிர்னதாப் (வயது 20) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

2 இளைஞர்கள் ஒன்றாக நீராடச் சென்றிருந்த நிலையில், மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சடலத்தை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related Posts