Ad Widget

நிர்வாகச் செயற்பாடுகளில் அனுபவம் இன்மையே பின்னடைவிற்கு காரணம்

தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை சமரசம் செய்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளில் ஒன்றான வடக்கு மாகாண சபையின் செயற்பாடு விமர்சனங்களுக்கு உள்ளாவதற்கு சபை உறுப்பினர்களின் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பான அனுபவம் இன்மையே பிரதான காரணம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், எதிர்க் கட்சித் தலைவர் எஸ்.தவராசா மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் மாகாண சபை செயற்பாடுகளில் செயற் திறன் இன்மை காணப்படுகின்ற போதிலும் தமிழ் மக்களின் நிலைப்பாடுகளையும் அரசியல் அபிலாசைகளையும் வெளிப்படுத்துவதிலும் மாகாண சபை தமது பங்களிப்பை சிறப்பாக செற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நேர்காணலில் கருத்து தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் தவராசா கருத்து தெரிவிக்கையில், மாகாண சபை செயற்பாடுகளுக்கு பல தடைகள், போதிய அதிகாரங்கள் இல்லை போன்ற பல நடைமுறை பிரச்சினைகள் இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் இருப்பினும் செய்யக் கூடிய வேலைகளையும் நடைமுறைப்படுத்தும் ஆளுமை இன்றி மாகாண சபை இருக்கின்றது என்பதே தமது குற்றச்சாட்டு எனத் தெரிவித்தார்.

Related Posts