இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலர் அத்தே ஞானசார தேரரை இந்திய விமானநிலையத்தில் வைத்தே இந்தியக் குடிவரவு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இலக்கிய விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஞானசார தேரர் கடந்த 25ஆம் திகதி இந்தியா புறப்பட்டிருந்தார்.
எனினும், அவர் இந்திய அதிகாரிகளால் நாட்டுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படாமையினால் அன்றே குடிவரவு அதிகாரிகளால் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
காலாவதியான நுழைவிசைவைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைய முயன்றதால் தான் அவர் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
