- Friday
- May 15th, 2026
பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவிப்பு தொடர்பில் வலி.வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுவரொட்டி கட்டுவன் சந்தியில் ஒட்டப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு சட்டத்தின் பிரிவு 38(A) யின் கீழ் 07.08.1987 ஆம் திகதி பிரிசுரிக்கப்பட்ட 465/14 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலுக்கு...
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு யாழ். மாநகரசபை உறுப்பினர் கே.எம்.நிலாம் (நியாஸ்) தனது முதல் மாதச் சம்பளத்தில் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார். அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் வீட்டிற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சென்ற யாழ். மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நிலாம் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கர...
வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்பன அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்பு என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நேற்று (வெள்ளிக்கிழமை) யாழில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே வடக்கு முதல்வர்...
தமிழினப் படுகொலையான உணர்வுமிக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பாதீர்கள். எங்களை நிம்மதியாக அழ விடுங்கள் எனத் தமிழ் அரசியல்வாதிகளிடம் மாவீரர் அறவிழியின் தந்தை மு. மனோகர் (காக்கா அண்ணா) கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழில் நேற்று வியாழக்கிழமை(10) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே தமிழீழ விடுதலைப் புலிகள்...
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் அதுதொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், ஊடக அறிக்கை 11.05.2018 வடமாகாண கல்வியமைச்சரின் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பானது தொடர்ச்சியாக...
எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி அன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA), இந்தியாவுடனான எட்கா (ETCA) உடன்படிக்கை உட்பட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...
கூடிய விரைவில் இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான தோற்றப்பாடுகள் காணப்படுவதாக வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) எமது தனியார் செய்திப்பிரிவிற்கு வழங்கிய விசேட பேட்டியொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இனப்படுகொலையைப் புரிந்த இராணுவத்தினது தளபதிக்கு வட.மாகாணசபை தொடர்பாகக் கருத்துக் கூறுவதற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை....
மீள் திருத்தம் செய்யப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் பரீட்சாத்திகள் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற முகவரியில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பில் டீசல் விலை அதிகரிப்பு காரணமாக, தனியார் பேருந்து கட்டங்களை அடுத்த வாரத்தில் இருந்து, 10 விகிதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் முடிவு செய்துள்ளது. குறித்த விடையம் தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம்...
இலங்கை கடற்படையினரால் 1992 ஆம் ஆண்டு விரட்டியடிக்கப்பட்ட கிளிநொச்சி இரணைதீவு மக்கள் தமது சொந்த இடங்களுக்கு தாமாகவே திரும்பியுள்ள போதிலும் அவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அம் மக்களுக்கு தேவையான தற்காலிக கூடார கொட்டகைகளை அமைத்து கொடுக்கும் நோக்கில் கிடுகுகள் மற்றும் தென்னை ஓலைகளை, ஈழமக்கள்...
தெற்கு சிங்கள மக்கள், வடக்கு தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்கள் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள், நல்லவர்கள் எனினும்...
மண்ணெண்ணெய் விலை அதிகரித்தாலும் சமுர்த்திக் குடும்பங்களுக்கும், மீனவர்களுக்கும் பழைய விலையான 44 ரூபாவுக்கே மண்ணெண் ணெய் வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனா ரத்ன தெரிவித்தார். மண்ணெண்ணெய்யின் விலை 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் தந்தையின் வாகனத்தில் மோதி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது, வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் உள்ள சுதர்ஷன் என்பவர் நேற்று முன்தினம்(09.05.2018) காலை தனது ஐந்து வயது மகளான ருஷா என்பவரை முன்பள்ளி பாடசாலைக்கு தனது கயஸ் ரக வாகனத்தில் ஏற்றி...
வட. மாகாண சபை தமது கோரிக்கையை ஏற்காத பட்சத்தில், முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வை புறக்கணிப்போம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமீனன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், ”நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வடக்கு- கிழக்கு தாயக மக்கள்...
‘பனங்காட்டில் புத்திக்கூர்மை’ எனும் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமானது. இராணுவத்தினரின் கண்டுபிடிப்புக்களை வடக்கு மக்களுக்கு பயன்பெற வைக்கும் நோக்கில் யாழ்ப்பாணப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் குறித்த கண்காட்சி நேற்றும் இன்றும் இடம்பெறுகின்றது யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஆம் திகதியை இன அழிப்பு நாளாகவும், தமிழ் தேசியத்தின் துக்க நாளாகவும் வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபையின் 122வது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்படி பிரகடனத்திற்கான பிரேரணையை முன்வைத்தார். குறித்த பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம்...
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய, எரிபொருளின் விலையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் நிகழும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அதன்படி எரிபொருள் விலை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடவோ அல்லது குறையவோ முடியும் என்றும் தெரிவித்தார்....
தமிழர்களுக்குரிய அரசியல், பொருளாதார, கலாசார உரிமைகளை எவராலும் புதைத்துவிட முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம் பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “குறுகில அரசியல் நோக்கத்துக்கா , அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும்...
அரசாங்கம் முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க வேண்டும். இல்லாவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையாக உள்ளது. இதனால் அரசாங்கம் எரிபொருள் மானியம் வழங்க முன்வர வேண்டுமென அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு அரசாங்கம் எரிபொருள்...
மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற...
Loading posts...
All posts loaded
No more posts
