போலி உறுதிமொழிகளை வழங்கி அரசாங்கம் தமிழர்களை ஏமாற்றிவிட்டது – மஹிந்த

விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த விடயத்திற்கு பின்னணியில் சொல்லப்படாத ஒரு உண்மை இருப்பதாகவும், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முதியங்கன ரஜமகாவிகாரைக்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் செய்த மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார். மேலும் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப்...

‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்திற்கு இலங்கையில் தடை!!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படத்துக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார். இதற்கிடையே இப்படத்தை திரையிடும் முயற்சியில் கடந்த மார்ச் மாதம் தணிக்கை பெறுவதற்காக இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும்...
Ad Widget

ஆனந்தசுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாது!- ஜனாதிபதி

அரசியல் கைதியான ஆனந்தசுதாகரன் நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனந்தசுதாகரின் விடுதலையை வலியுறுத்தி 3 லட்சம் கையெழுத்துக்களுடன், வட. மாகாணக் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளித்திருந்தார். இந்நிலையில், இந்த மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தினால், வட. மாகாணக் கல்வி அமைச்சருக்கு...

ஆவாக்குழுவின் பின்புலத்தில் இராணுவம்!

வடக்கில் வன்முறையில் ஈடுபட்டுவரும் ஆவாக் குழுக்களின் பின்புலத்தில் இராணுவத்தினர் செயற்படுவதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு, இராணுவ கட்டளைத் தளபதி மேஜர்.ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மறுப்பு தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது, யாழில் வன்முறையில் ஈடுபடுவோருக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக வெளியாகிவரும் செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு...

யாழில் இராணுவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம், கோட்டையில் இராணுவத்திற்கு காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கோட்டையின் தெற்குப் புறமான பண்ணை கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அங்கு இராணுவ முகாம் அமைக்கக்கூடாதென வலியுறுத்தியும் தொல்பொருளியல் திணைக்களம் இராணுவத்திற்கு குறித்த காணியை வழங்கக்...

தமிழர்களுக்கு இரண்டாம் மொழியறிவு அவசியம்: முதலமைச்சர்

இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு இரண்டாம் மொழியறிவு அவசியம் என்றும், அந்த வகையில் ஆங்கில மொழியை இரண்டாம் மொழியாகத் தெரிவு செய்து பயிற்றுவிக்க வேண்டியது பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் முக்கிய கடப்பாடாகும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழில் பாலர் பாடசாலையொன்றின் பரிசளிப்பு விழா, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு...

விஜயகலாவின் இராஜினாமா கடித்தை ஏற்றுக்கொள்வாரா ஜனாதிபதி?

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வழங்கிய இராஜினாமா கடிதத்திற்கு விரைவில் முடிவினை அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என கூறிய கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்...

தமிழர்களின் இலக்கை அடைவதற்கு ஒழுக்கம் முக்கியமானது – மாவை

தமிழர்களின் இலக்கை அடைவதற்கு ஒழுக்கம் மிக முக்கியமானது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 16 ஆவது திருக்குறள் மாநாட்டின் நேற்றையதினம் நடைபெற்ற (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய விடுதலைக்கு...

யாழில் அதிகரிக்கும் வன்முறைகள்: சட்டம் ஒழுங்கு அமைச்சர் வடக்கிற்கு விஜயம்!

வடக்கு மாகாணத்தில் வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், விரைவில் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். யாழில் அதிகரித்துவரும் வன்செயல்கள் குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மைக் காலமாக வட.மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில்...

மதுபோதையில் அநாகரியமாக நடந்துகொண்ட அந்தணர்! 200 மணித்தியாலயங்கள் சமூக சேவை செய்யுமாறு தண்டனை!!

மது போதையில் பொது இடத்தில் அநாகரியமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அந்தணர் ஒருவருக்கு 200 மணித்தியாலயங்கள் சமூக சேவை செய்யுமாறு தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மது போதையில் பொது இடத்தில் அநாகரியமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரால் 45 வயதுடைய அந்தணர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர்...

சுண்டுக்குளியில் சகோதரர்கள் மீது வாள்வெட்டு!!

சுண்டுக்குளி மதுபான நிலையத்துக்கு அருகே சகோதரர்கள் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 8 பேர் கொண்ட குழு ஒன்று வாள்கள், பொல்லுகளுடன் வந்து தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. அரியாலை, முள்ளி வீதியை சேர்ந்த சகோதர்களே தாக்குதலுக்குள்ளாகிக் காயமடைந்தனர். தனிப்பட்ட பிரச்சினை காரணமாகே சகோதரர்கள்...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம்!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த அறிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இப் பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளன. இந்தப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது....

அதிகாரப் பகிர்வை உருவாக்க எம்மால் முடியாதுள்ளது: சம்பந்தன்

இதுவரை நம்பகரமான அதிகாரப்பகிர்வை உருவாக்க எங்களால் முடியாதுள்ளது என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டினைப் பிரிக்காது இணைந்து ஐக்கியமாக நாட்டினை வழிநடத்திச் செல்ல...

காணாமற் போனோரின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரதம்!

காணாமற் போனோரின் உறவினர்கள், யாழ். நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பித்துள்ளனர். காணாமற் போனோரின் உறவினர்களின் வவுனியா மாவட்டச் சங்கத்தால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போராட்டம் மாலை நான்கு மணிவரை இடம்பெறவுள்ளது. காணாமல் போனோரின் உறவிவினர்கள் வவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற சுழற்சிமுறை உண்ணாவிரத போராட்டம்...

சுழிபுரம் மாணவியின் படுகொலையை கண்டித்து புத்தளத்தில் விழிப்புணர்வு பேரணி

சுழிபுரம் பகுதியில் மாணவி ரெஜினா படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புத்தளத்தில் கண்டன போராட்டமும் விழிப்புணர்வு பேரணியும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. புத்தளம், கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி, பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டு கட்டைக்காடு பகுதிக்கு சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது. இதன்...

வடக்கில் இந்தியாவின் அவசர அம்புலன்ஸ் சேவை ஆரம்பம்!

இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் வடக்கில் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். குறித்த சேவை எதிர்வரும் 21 ஆம் திகதி வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தவகையில் வடமாகாணத்திற்கு 20 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளது. இதில் யாழ்ப்பாணத்திற்கு 7 அம்புலன்ஸ் வண்டிகளும்,...

எரிபொருள்களின் விலைகளைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

எரிபொருள்களின் விலையைக் குறைப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்தது. இதன்படி பெற்றோல் (92 ஒக்ரைன்) 145 ரூபாவாகவும் பெற்றோல் (95 ஒகரைன்) 155 ரூபாவாகவும் டிசல் 118 ரூபாவாகவும் சுப்பர் டிசல் 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டன. எனினும் எரிபொருள்களின்...

யாழ்ப்பாணத்தில் மீண்டும் விஷேட அதிரடிப்படை சோதனை!!

சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் குடாநாட்டில் விஷேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் வலம்வரும் விசேட அதிரடிப்படையினர் வீதிச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் வீதிகளில் செல்லும் வாகனங்களையும் மக்களையும் வழிமறித்து கடுமையான சோதனைக்குட்படுத்தி வருகின்றனர். இந்நிலையானது யுத்தகாலத்தில் விசேட அதிரடிப்படையினர் வீதிச் சோதனைகளை மேற்கொண்டு மக்களை அச்சத்தில் உறையவைத்தது...

கைதட்டியதற்கு மன்னிப்புக்கோரி கடிதம் வழங்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

கடந்த திங்கட்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் விஜயகலாவின் உரையை வரவேற்று கைதட்டிய மற்றும் விசிலடித்து ஆரவாரித்தாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆண் அரச பணியாளர்களை மன்னிப்புக் கோரும் கடிதங்களை எழுதித்தருமாறு பிரதேச செயலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயகலா தனது உரையில் விடுதலைப் புலிகள் தெடர்பில் உரையாற்றியிருந்தார். அதன் போது வெளிவிவகார மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்கள்,...

இறப்புச் சடங்குகளில் இனிமேல் பட்டாசு கொளுத்துவது தடை? – வடக்கு மாகாண சபை

வடக்கு மாகாணத்தில் சாவுச் சடங்குகளில் பட்டாசுகள் கொளுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை ஒன்று முன்மொழியப்படவுள்ளது என்று அறியவருகிறது. வடக்கு மாகாண சபையின் 126ஆவது அமர்வு எதிர்வரும் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் குறித்த பிரேரணையை சபையில் முன்மொழியவுள்ளார் என்று தெரிய வருகிறது. அவர் தனது பிரேரணையில், வடக்கு...
Loading posts...

All posts loaded

No more posts