Ad Widget

யாழில் அதிகரிக்கும் வன்முறைகள்: சட்டம் ஒழுங்கு அமைச்சர் வடக்கிற்கு விஜயம்!

வடக்கு மாகாணத்தில் வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், விரைவில் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

யாழில் அதிகரித்துவரும் வன்செயல்கள் குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மைக் காலமாக வட.மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இதனால் அங்கு பாதுகாப்பு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளது. இதற்காக பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து நாம் பல்வேறு விசேட திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கென பொலிஸாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றமையினால், அதனைக் கட்டுப்படுத்த அங்கு அதிகளவான பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts