Ad Widget

விஜயகலாவின் இராஜினாமா கடித்தை ஏற்றுக்கொள்வாரா ஜனாதிபதி?

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வழங்கிய இராஜினாமா கடிதத்திற்கு விரைவில் முடிவினை அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என கூறிய கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் தனது இராஜினாமா கடிதத்தினை சமர்பித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த தினத்தில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் பதவி விலகியதை அடுத்து, அமைச்சரின் இராஜினாமா தொடர்பிலான முடிவு கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இதன் பின்னர் புதிய செயலாளராக உதய R செனவிரத்ன ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இருப்பினும் அவர் தனது பெறுப்புக்களை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அவர் தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் இராஜாங்க அமைச்சரின் இராஜினாமா தொடர்பில் ஜனாதிபதி தனது தீர்மானத்தை வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts