- Wednesday
- June 17th, 2026
யாழில் தமிழ் மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படும் குள்ள மனிதர்கள் தொடர்பாக இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை என, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 27 இன் கீழ் 2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) எழுப்பப்பட்ட கேள்விக்கு...
யுத்தகாலத்தில் அழிவடைந்த காங்கேசன்துறை தயிலிட்டி திஸ்ஸ விகாரையை மீள புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது. பாதகட விமலஞான தேரர் தலைமையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். 1946ம் ஆண்டு எழுதப்பட்ட உறுதி அடிப்படையில் பாதகட விமலஞான தேரர்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படும் விவகாரம் யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் வெளிச்சத்துக்கு வந்தது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி நேற்று நேரில் ஆராய்ந்தார். ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படுவதை அவர் உறுதி செய்தார். யாழ் மாநகரசபையின் அமர்வு நேற்றுமுன்தினம் மாநகர...
“வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 88 சதவீதமான காணிகள் தற்போது அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 12 சதவீதமும் வெகுவிரைவில் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டுமென்ற தெளிவான கொள்கையை அரசு கொண்டிருக்கின்றது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் மயிலிட்டி பாடசாலை மற்றும் அதனையண்டிய காணிகளை எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் விடுவிக்க...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிவகுமார் ரகுநாத் தெரிவித்துள்ளார். இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து முன்னாள் போராளிகள் தமிழர்களை காட்டிக்கொடுப்பதாக அண்மையில் ஊடகங்களிடம் பேசிய முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,...
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு இந்த வருட இறுதிக்குள் தீர்வினை முன்வைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார். மேலும், வடக்கில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மயிலிட்டி துறைமுக புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) மயிலிட்டி துறைமுக...
சாவகச்சேரி அரசடி பகுதியில் ரயிலுடன் மோதி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புகையிரத கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்ஞை விளக்கு எரிந்துகொண்டிருந்த போதும், புகையிரத கடவையினை கடக்க முற்பட்ட வேளை, கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற கடுகதி ரயில் மோட்டார்...
கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய பகுதிகளிலுள்ள மூன்று வீடுகள், தேனீர் கடை, வாகனத்தரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. ஆவா கும்பலுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டறிக்கையை வழங்கிய கும்பல், தமது அட்டூழியங்களை வீடியோ அழைப்பில் நேரலையாக ஒருவருக்கு காண்பித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் நேற்று(புதன்கிழமை) மாலை...
யாழ்ப்பாணத்தில் கடந்த 1965ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்தினை 33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியை யாழ்.சிங்கள மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இவர்களின் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை...
மன்னார் கீரி கடற்கரையில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்களை, யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சேமித்து அப்புறப்படுத்தியுள்ளார். குறித்த கடற்கரையில் பிளாஸ்ரிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கரையொதுங்குவதால் மீனவர்களும் சுற்றுலாப் பிரயாணிகளும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். அத்தோடு, கடற்கரையில் துர்நாற்றம் வீசி, சூழல் பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் 4ஆம் ஆண்டு மாணவனான ஆர்.றொக்சன் என்பவர்...
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் என்றே தமிழ்மக்கள் நம்பியிருந்தார்கள். இதனாலேயே பாராளுமன்றத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் கூட்டமைப்பை அமோகமாக வெற்றிபெற வைத்தார்கள் கூட்டமைப்புக் கேட்டுக்கொண்டதன் பேரில் மத்தியில் மைத்திரி அரசையும் வெல்லவைத்தார்கள். ஆனால் இன்று மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக நடைபெற்றது தமிழினப்...
சுழிபுரம் சிறுமி ரெஜினா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு மல்லாகம் நீதிமன்றம் மீண்டும் விளக்கமறியல் நீடித்துள்ளது. சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவநேஸ்வரன் றெஜினா (வயது 6 ) என்ற சிறுமி கடந்த ஜுன“ மாதம் 25 ஆம் திகதி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் கழுத்தில்...
முச்சக்கரவண்டி சாரதிகள் குறைந்தபட்ச வயதெல்லையை 35 ஆக மட்டுப்படுத்த தேவையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். குறித்த விடையம் தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த யோசனையை முன்வைத்திருந்தார்....
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 30 பேருக்கு பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த நியமனமானது சமாதானத்திற்கு ஒரு முன்னேற்றகரமான சம்பவமாக அமைக்கின்றது என, வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கான அரச நியமனங்கள் அலரிமாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த விடயம்...
“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும். தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்” இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கொக்குவில் சம்பியன் லேனில் உள்ள மருத்துவர் ஒருவரின்...
அரச சேவைக்கு 4,100 பட்டதாரிகள் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (20) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு 3 வருடங்கள் பூர்த்தி அடைவதை முன்னிட்டு இந்நாட்களில் பல அபிவிருத்திச் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ´மூச்செடுத்த மூன்று வருடங்கள்´ என்பது 3 வது நிறைவு ஆண்டின்...
வடக்கில் உள்ள இராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருவதன் காரணமாகவே அவற்றை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தாக முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை கூறியுள்ளார். போர் நினைவு சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்...
வட மாகாண சபை தொடர்ந்தும் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாக வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதன் மூலம் நிரூபனமாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....
அமைச்சரும், முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்சஷல் சரத் பொன்சேகாவும் ஒரு யுத்தக்குற்றவாளியே என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய போது தமிழ் மக்கள் அவருக்கு...
யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று அரச நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்தார்....
Loading posts...
All posts loaded
No more posts
