அரச புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் : யாழ்ப்பாண மாநகர சபையில் கடும் கண்டனம்

தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கான வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களை அரச புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு இன்று (20) திங்கட்கிழமை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போது, நினைவுத் தூபி அமைப்பதற்காக மாநகர...

புனர்வாழ்வளிக்கப்பட்ட 30 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கிவைப்பு!

புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு இன்று அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. 30 பட்டதாரிகளுக்கு அலரிமாளிகையில் வைத்து நியமனங்கள் வழங்கப்பட்டன. புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் யோசனைக்கு, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தது. அதற்கமைவாக குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Ad Widget

கேக் கடை மூன்றாவது தடவையாகவும் இன்று முற்றுகை!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20) திங்கட்கிழமை மூன்றாவது தடவையாக முற்றுகையிடப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 30 பைக்கட்டுக்களாகப் பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்” இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்....

மருத்துவருக்கு அச்சுறுத்தல்: யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் கண்டனக் கவனயீர்ப்பு

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் மருத்துவர் ஒருவரை அச்சுறுத்தும் வகையில் அவரது வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக இன்று திங்கட்கிழமை மதியம் அரை மணிநேர கண்டன போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்த மருத்துவர்கள், கைது செய்யப்பாடத...

நல்லூரில் நவீன கற்பகம் சிறப்பு அங்காடி விற்பனை நிலையம் திறப்பு

பனை அபிவிருத்திச் சபையின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நவீன கற்பகம் சிறப்பு அங்காடி சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் வைத்தியகலாநிதி சி.சிவசங்கர் தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றது பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் பாக்கியநாதன் தம்பதிகள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தனர். 1980 ஆம்...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ; யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளநிலையில் யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார். சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்ப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் மூத்த...

கொக்குவில் வீடு புகுந்து மருத்துவருக்கு அச்சுறுத்தல்!!

யாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கொக்குவில் சம்பியன் லேனில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. “3 மோட்டார்...

சகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே நோக்கம் – சுமந்திரன்

சகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே புதிய அரசியலமைப்பின் நோக்கம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக, இரத்தினபுரியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும், இதுவரை நாம் 3 அரசியலமைப்பைக் கொண்டிருந்த போதிலும்,...

முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் டெனிஸ்வரன் கோரிக்கை!!

தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு தமிழனத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிடம், வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பை...

வடக்கிற்கு இந்திய வீட்டு திட்டமே சிறந்தது: கூட்டமைப்பு

வடக்கில் வீடுகள் அமைக்கும் திட்டத்தை எந்த நாடு முன்னெடுக்கின்றது என்பது முக்கியமல்ல, ஆனால் அவ்வாறு அமைக்கப்படும் வீடுகளானது எமது மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்வதானதாக இருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கில் வீடுகளற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பது தொடர்பில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள்...

யாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

யாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் இரவு வாகனத்தின் மின் விளக்குகளை அணைக்காமல் சென்றதனால் இரு தரப்புக்கிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முறுகல் நிலை மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலை அவதானித்துக்...

வடக்கின் சில பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம்?

நாட்டின் வடபகுதி கரையோர பகுதிகளை சீனாவுக்கு குறிப்பிட்ட கால ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரலாற்று கால தொல்லியல் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவே சீனாவிற்கு இவ்வாறு வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கின் பல்வேறு பகுதிகளில் வரலாற்றுக் கால தொல்லியல் ஆய்வுகளை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் இவ்...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை – முதலமைச்சர்

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என நினைத்தால் தீர்க்கலாம். ஆனால் அந்த எண்ணம் அரசுக்கு அறவே இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன் கூறியுள்ளார். அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருப்பதால் அவர்கள் எதையாவது செய்தே தீர...

குற்றச்செயல்களில் ஈடுபடுவோரைப் பிடிக்க பொதுமக்களின் உதவியைக் கோருகிறது பொலிஸ்

வாள்வெட்டுக் கும்பல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் தமக்கு நேரடியாகத் தகவல்களை வழங்கி உதவுமாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ கேட்டுள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை இரகசியமாக தொலைபேசியிவோ அல்லது நேரடியாகவோ தெரிவிக்குமாறு, அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் தலையகப் பொலிஸ் நிலையத்தில் இன்று (18) நடைபெற்ற...

ஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள்!! :பொலிஸாரிடம் தாய் கதறல்

ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார். இந்தத் தகவலை வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில்...

கிளிநொச்சியில் தனியார் கல்விநிலைய நிர்வாகிக்கு பாலியல் குற்றச்சாட்டில் விளக்கமறியல்!

கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலையம் ஒன்றின் நிர்வாகி தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வருகின்ற மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த கல்வி நிலையத்தை பொறுத்தவரை அங்கு 18 வயதிற்கும் குறைந்தவர்களே கல்வி கற்று வருகின்ற நிலையில்,...

9 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு! மரணம் தொடர்பில் சந்தேகம்!!

வவுனியா – கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுவனின் சடலமொன்று நேற்றைய தினம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் சிறிய தந்தை ஆகியோர் தொழிலுக்கு சென்ற நிலையில், வீட்டில் சிறுவன் தனிமையில் இருந்துள்ளார். அவனது 3 வயதான சகோதரன் அயல் வீட்டில் இருந்துள்ளார். வேலை...

முன்னாள் ஆளுநர் பதவிவிலக காரணமான சி.வி.விக்னேஷ்வரனே வருத்தப்படுவது வேடிக்கையானது

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ்.பளிகக்கார பதவிவிலக சி.வி.விக்னேஷ்வரனே காரணம் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அவரது இராஜினாமாவிற்கு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது வருத்தப்படுவது போல் நடிப்பது வேடிக்கையாக இருப்பதாக, வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவினால் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஊடக...

பணிநிறுத்தத்தை கைவிட்டு புதிய போராட்டத்தில் குதித்த தனியார் பேருந்து ஊழியர்கள்!

அனைத்து இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள், பணிநிறுத்த போராட்டத்தை கைவிட்டு, சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தங்களது பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை முன்வராத நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து உரிமையாளர்களின் அச்சுறுத்தலை தொடர்ந்தே ஊழியர்களின் பணிநிறுத்த போராட்டத்தை கைவிட தீர்மானித்ததாக அனைத்து இலங்கை தனியார்...

பலாலிக்கான வானூர்திப் பாதை வரையும் பணிகள் ஆரம்பம்!!

பலாலி வானூர்தி நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­நா­டு­க­ளுக்­கான வானூர்­திச் சேவை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தால், பலாலி வானூர்தி நிலை­யத்­துக்கு வானூர்­தி­கள் வருகை தரும், வெளிச் செல்­லும் பாதை வரைபடம் வரை­யும் பணி, சிவில் வானூர்­திப் பணி­ய­கத்­தால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாகத் தரம் உயர்த்­து­வ­தற்கு முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அடிப்­ப­டைத் தேவை­களை மாத்­தி­ரம் முத­லில் பூர்த்தி செய்து தமி­ழ­கத்­துக்­கான...
Loading posts...

All posts loaded

No more posts