மருத்துவருக்கு அச்சுறுத்தல்: யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் கண்டனக் கவனயீர்ப்பு

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் மருத்துவர் ஒருவரை அச்சுறுத்தும் வகையில் அவரது வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக இன்று திங்கட்கிழமை மதியம் அரை மணிநேர கண்டன போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்த மருத்துவர்கள், கைது செய்யப்பாடத விடத்து, தாம் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் மருத்துவர் இமானுவேல் சந்திரகுமார் என்பவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

யாழ். கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் உள்ள அவரது வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி உள்நுழைந்த கும்பல், வீட்டின் யன்னல் கண்ணாடிகள் மற்றும் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து சேதப்படுத்திய பின்னர் தப்பி சென்றமையை கண்டித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related Posts