புனர்வாழ்வளிக்கப்பட்ட 30 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கிவைப்பு!

புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு இன்று அரச நியமனங்கள் வழங்கப்பட்டன.

30 பட்டதாரிகளுக்கு அலரிமாளிகையில் வைத்து நியமனங்கள் வழங்கப்பட்டன.

புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் யோசனைக்கு, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தது.

அதற்கமைவாக குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related Posts