Ad Widget

முன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 30 பேருக்கு பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனமானது சமாதானத்திற்கு ஒரு முன்னேற்றகரமான சம்பவமாக அமைக்கின்றது என, வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கான அரச நியமனங்கள் அலரிமாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் தனது மகிழ்சியை தெரிவித்து அவர் அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வருடம் 35 புனர்வாழ்வு பெற்ற போராளிகள் பட்டதாரிகள் நியமனத்தில் உள்வாங்கப்பட்டு அரசபணிக்கு அமர்த்தப்பட்டார்கள்.

மேலும் இரண்டாம் கட்டமாக நேற்றைய தினம் 30 புனர்வாழ்வு பெற்ற போராளிகள் அரசபணிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். சமாதானத்திற்கு இது ஒருமுன்னேற்றகரமான சம்பவமாக அமைக்கின்றது.

இதுபோன்று மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசசேவைகள் கிடைக்க எனது முழு ஒத்துழைப்பினையும் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Posts