அனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட...

சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானம்!

நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணான வகையில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதென்றும், அதற்கெதிராக சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அதன் பிரகாரம் எதிர்வரும் 24ஆம் திகதி கண்டியிலும், 27ஆம் திகதி களுத்துறையிலும், டிசம்பர் 3ஆம்...
Ad Widget

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை: சந்தேகநபர்கள் மூவருக்கும் பிணை

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர் மூவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகரின் வாகனத்துக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை இடைமறித்த ஒருவர், அவருடைய கைத்துப்பாக்கியைப் பறித்து அவர்...

மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்:ரவிகரன்

உறவுகளை நினைவுகூருவதற்காக மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நியாயமான ஒரு தீர்வு கிடைக்காத நிலையை முன்னைய ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக ஏற்படுத்திவந்ததனாலேயே, போராடவேண்டிய நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டார்கள். அத்துடன் அந்தப் பிள்ளைகளை விதைத்த இடத்தில் அவர்களுடைய உறவுகள்...

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் ஜனாதிபதி மகிழ்ச்சி!

நாடாளுமன்றில் இன்று அமைதியை பேணியமைக்காக அனைவருக்கும் நன்றி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நான்காவது நாளாக இன்று (திங்கட்கிழமை) 1 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார். “கட்சித்தலைவர்களுடனான நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பில்...

வித்தியா கொலை உள்ளிட்ட முக்கிய விசாரணைகளை மேற்கொண்ட நிசாந்த சில்வா உடனடி இடமாற்றம்!

மகிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை,லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு மிகத்திறமையாக...

நிதியுதவியை நிறுத்தியது உலக வங்கி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் சுற்றுலா வளர்ச்சி திட்டத்திற்காக இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு இணங்கியிருந்தது. இதற்காக 2018...

எம்மை வெளியேற்றுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எந்த அருகதையும் கிடையாது – க.சிவநேசன்

தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற புளொட்டின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழுத்தத்தின் அடிப்படையிலேயே புளொட் அமைப்பு வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பேரவையில் ஈபிஆர்எல்எப் கட்சியை நீடிப்பதற்கு அனுமதியளிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளம் சட்டத்தரணிகள் பேரவையின் முக்கியஸ்தர்களுக்கு அறிவித்திருந்தனர். எனினும்...

வடக்கில் டெங்கு அபாயம்: வைரஸ் காய்ச்சலும் பரவுகிறது – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் அதிகரித்துள்ளன என்று சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், நாட்டின் பல மாவட்டங்களில் இன்புலுவன்ச வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இடைவிடா காய்ச்சல், இருமல், வாந்தியெடுத்தல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரின் சோதனையைப் பெறுமாறு ஆலோசனை வழங்கியுள்ள சுகாதார அமைச்சு, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகக்...

வடமாகாணத்தில் கன மழைக்கு வாய்ப்பு!

வடக்கு மாகாணத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் தென்கிழக்குத் திசையிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதால் இன்றிரவு தொடக்கம் 48 மணித்தியாலங்களுக்கு மழையுடனான காலநிலை நீடிக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வடக்கில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என்பதுடன் நாட்டின்...

கூட்டமைப்புக்கு எதிர்மாறான கருத்துடைய ஒரு துருவக் கட்சியாக நாம் அனைவரும் இணைவோம் – பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் அழைப்பு

“தேசியக் கட்சிகளுடன் தற்பொழுது ஒரே கருத்துடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரே எதிர்மாறான கருத்துடைய ஒரு துருவக் கட்சியாக நாம் சேர்ந்து பயணிக்க வேண்டும். மாற்றுத் தலைமைத்துவத்தை உருவாக்கக் காலம் கனிந்துள்ளது. தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளுடன் நாம் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு. புதிய பொதுச் சின்னத்தின் கீழ் எம்மை ஒன்றிணைக்கும் பணியை...

மூத்த ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு!

யாழ்.ஊடக அமையத்தின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழில் நெருக்கடியாக சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய மூத்த ஊடகவியலாளர்களான ம.வ.கானமயில்நாதன், சண்முகராஜா...

எம்மை நாமே அழிக்கும் துர்ப்பாக்கிய நிலை இனிமேலும் நடக்கக்கூடாது: சி.வி.விக்னேஸ்வரன்

எமக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி எம்மை நாமே அழிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட நாம் இனிமேலும் இடமளிக்கமுடியாது என முன்னாள் வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “எவ்வாறு எமது...

போரால் பாதிக்கப்பட்ட மக்களிடையே எந்த முன்னேற்றமும் இல்லை: கஜேந்திரகுமார்

யுத்தம் நிறைவடைந்த பின்னர் மாறிய அரசாங்கங்களால் போரால் பாதிக்கப்பட்ட மக்களிடையே எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்ட...

நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்!

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தான் ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டுமானால் அது சரியான முறையில் செயற்படுத்தப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற அனைத்துக் கட்சி தலைவர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்தோ அல்லது இலத்திரனியல் முறையைப்...

நாவாந்துறையில் மீன்பிடிப்படகு இனந்தெரியாதோரால் எரிப்பு!

யாழ்ப்பாணம், நாவந்துறை மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு கேரதீவு இறங்குதுறையில் தரித்து நின்றபோதே கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளது. குறித்த படகானது அன்ரன் சிலுவைதாசன் என்பவருக்குச் சொந்தமானது என்பதுடன், அப்படகினை நம்பி தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டுவந்த நிலையில், இவ்வாறு...

சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

இலங்கை அரசியலில் நீடிக்கும் குழப்பநிலைக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே இடம்பெற்ற அமர்வுகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்தது. சிலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடந்த...

கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – வியாழேந்திரன்

சம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலே தான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டேன் என பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதியமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக...

பதவியைத் துறக்கத் தயாராகவிருந்தேன் ஆனால் வன்முறையால் என்னை வெளியேற்ற முடியாது – மகிந்த

“நாடாளுமன்றில் சட்டரீதியாக எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறக்க தயாராக இருந்தேன்” என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். பலாத்காரமாக அல்லது வன்முறைகளால் என்னை வெளியேற்றுவது இலகுவான காரியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். வீரகெட்டியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் .தனைத்...

இன்று மாலை கூட்டமைப்பு எம்.பிக்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி?

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்புவிடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் நெருக்கடிகள் மற்றும் நாடாளுமன்றில் இரண்டாவது தடவையாக நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தனது நிலைப்பாட்டை...
Loading posts...

All posts loaded

No more posts