யாழ்.நாக விகாரை வளாகத்தில் இந்து ஆலயம் அமைக்க நடவடிக்கை

இன நல்லிணக்கத்தின் அடையாளமாக யாழ்ப்பாணம், நாக விகாரை வளாகத்துக்குள் ஆகம விதிமுறைகளுக்கு அமைய கோபுரங்களுடன் கூடிய இந்து ஆலயமொன்றை நிர்மாணிக்கின்ற வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பிரதம விகாராதிபதி மீகஹ ஜந்துரே ஸ்ரீவிமல தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மீகஹ ஜந்துரே ஸ்ரீவிமல தேரர் இதனை தெரிவித்துள்ளார். அவர்...

மாவீரர் தின நிகழ்வுகளை தடைசெய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!

வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை தடைசெய்வதற்குரிய நீதிமன்ற உத்தரவினை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர் பொலிஸ்மா அதிபரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர், “நாட்டில் தீவிரவாத அமைப்பொன்றை...
Ad Widget

யாழில் இளைஞர்கள் பொலிஸாரால் சித்திரவதை: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழில் அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாக பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்து, கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளதாவது, “கடந்த 19ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் நானும் எனது...

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையில் கப்பல் சேவை!

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சபரி மலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனவும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொம்பனித்தெரு ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஐயப்ப யாத்திரைக் குழுவினருக்கும், அமைச்சர்...

பொன்னாலைப் பாலத்தில் விபத்து: பூசகர் பலி!

தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பன ஒன்றை ஒன்று மோதிக் கொண்டதில் பூசகர் ஒருவர் உயிரிழந்தார். துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் பொன்னாலைப் பாலத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது. காரைநகரில் உள்ள ஆலயம் ஒன்றில் பூசையை முடித்து வடலியடைப்பிலுள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த பூசகர், கடற்றொழிலுக்குச் சென்றுவிட்டு...

தமிழினத்தை முற்றாக அழிக்க தென்னிலங்கை துணிந்துவிட்டது: கஜேந்திரகுமார்

தமிழர் தாயக பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து, எமது இனத்தை முற்றாக அழிக்கும் அளவிற்கு தென்னிலங்கை துணிந்துவிட்டது என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு...

மறு அறிவித்தல் வரும் வரை புதிய நியமனங்கள் இரத்து

மறு அறிவித்தல் வரும் வரை அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு புதிய நியமனங்களை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி செயலகம், அனைத்து அமைச்சிற்கும் அறிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகம் நேற்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள விசேட சுற்றறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரச திணைக்களங்கள் உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களில் தலைர்கள் மற்றும் இயக்குனர்கள் சபைகளில் வெற்றிடங்கள் காணப்பட்டால்...

ரணில் பிரதமராவதே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ஜெனிவாவில் எடுத்துரைப்பு!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு என ஜெனிவாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று (வியாழக்கிழமை) அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விவாதம் ஒன்று நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ‘மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை பாதுகாப்பதில்...

யாழ். பல்கலையில் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் மும்முரம்!

மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபியின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபியைச்சுற்றி வளைவுச்சுவர்கள் அமைக்கப்பட்டு நினைவுத்தூபி வடிவமைக்கப்பட்டு மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. தமிழ் மக்களின்...

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்!

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின அனுஷ்டிப்பு வாரம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இன்னுயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்த முதலாவது மாவீரர் சங்கரின் நினைவாக, அவர் உயிரிழந்த கார்த்திகை 27ஆம் திகதி, விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனினால் மாவீரர் தினமாக 1987ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து...

நந்திக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பெருக்கெடுத்தது!

முல்லைத்தீவு – நந்திக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பகுதி பெருக்கெடுத்துள்ளது. வடக்கில் தற்போது கடும் மழை பெய்துவருகின்ற நிலையில், குறித்த வாய்க்கால் பகுதி இன்று (புதன்கிழமை) காலை பெருக்கெடுத்து கடலுடன் சங்கமித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை நீடிப்பதோடு, குறிப்பாக வடக்கில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் 100-150 மில்லிமீற்றர்...

யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் சடலம் கண்டெடுப்பு

யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம், யாழ்.கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் (வயது-33) என்பவருடையதென தெரியவந்துள்ளது. யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகிலுள்ள பாவனைக்கு உட்படுத்தப்படாத வீட்டிலேயே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. கடற்றொழிலில் ஈடுபட்டுவந்த ஜோசப் ஜெபர்சன், இரவு வேளைகளில் குறித்த வீட்டில் உறங்குவதாக...

நாடாளுமன்ற செங்கோலின் படம் பொறித்து பிரதேச சபை கடிதத் தலைப்பு!

நாடாளுமன்ற செங்கோலின் படம் பொறிக்கப்பட்ட கடிதத்தலைப்பை நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பயன்படுத்தியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சபையின் அனுமதியை பெறாமல் குறித்த கடிதத் தலைப்பை அவர் பயன்படுத்தியதோடு, பிரதேசசபையின் பழைய இலட்சினையும் அதில் பொறிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாதென நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார். எனினும், அரசின் இலட்சினை மற்றும்...

இலங்கையர்கள் பல ஆபத்தான சூழலை எதிர்கொண்டுளதால் அவர்களின் புகலிட விண்ணப்பங்களை நிராகரிக்கவேண்டாம் – பிரிட்டன் அமைச்சர்

“இலங்கையர்கள் பல ஆபத்தான சூழலை எதிர்கொண்டுள்ளனர். எனவே லண்டனில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பதை இடைநிறுத்துமாறும் புகலிடக் கொள்கையை மீளாய்வு செய்யுமாறு பிரிட்டன் உள்நாட்டு அலுவலகத்திடம் வலியுறுத்தியுள்ளேன்” இவ்வாறு பிரிட்டன் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நிழல் வெளிவிவகார அமைச்சருமான லிஸ் மைக்கின்ஸ் தெரிவித்துள்ளார். “இலங்கையில் சட்டபூர்வமான முறைப்படி பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால...

சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆள்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

வரும் டிசெம்பர் மாதம் இடம்பெறும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்று ஆள்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார். விண்ணப்பித்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை கிடைக்கப் பெறாவிட்டால் அல்லது ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் விரைவாக ஆள்பதிவுத் திணைக்களத்திற்கு வந்து திருத்திக்கொள்ளுமாறு அவர்...

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும்

தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக பலமடைந்து மேற்கு நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் விரைவில் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் தபாலிடும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு...

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட போகிறது என வதந்திகளை நம்பவேண்டாம்!

தற்போது மழை வீழ்ச்சி குறைந்து காணப்படுவதால் இரணைமடு குளத்தின் நீரேந்தும் பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் குறைந்து வருவதனால் வான் கதவுகள் திறக்கப்படமாட்டாது என எந்திரி சுதாகரன் தெரிவித்துள்ளார். இரணைமடு குளத்தினை தொடர்ந்து கண்காணிப்புகள் இடம்பெற்று வருவதாகவும் குளத்தில் நீர் 32.11 அடி இருப்பதனால் 36 அடி வரைக்கும் சேமிக்க முடியும் என்ற காரணத்தால்...

நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை – சிவாஜிலிங்கம்

நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சமகாலத்தில் உள்ள அரசியல் நிலமையில் தமிழ்தேசிய...

‘நாட்டில் அரசாங்கம் இல்லை, பிரதமர் இல்லை“ – இரா. சம்பந்தன்

அதிகாரம் இல்லாத ஆட்சி மிகவும் ஆபத்தானது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள உலக நாடுகளின் தூதுவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. நாட்டில்...
Loading posts...

All posts loaded

No more posts