நாடாளுமன்றில் இன்று அமைதியை பேணியமைக்காக அனைவருக்கும் நன்றி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நான்காவது நாளாக இன்று (திங்கட்கிழமை) 1 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார்.
“கட்சித்தலைவர்களுடனான நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பில் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, இன்று நாடாளுமன்ற அமர்வில் அமைதியைப் பேணிய அனைத்து கட்சி தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்.” என பதிவிட்டுள்ளார்.