- Tuesday
- May 12th, 2026
யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி ஒருவரின் வீட்டில் துணிகர திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வீட்டிலிருந்த பொருட்களும் ஒரு தொகைப் பணமும் திருட்டுக் போயுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ் மாநகர சபைக்கு முன்னாலுள்ள மாநகர சபை குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில் தனியே தங்கி...
கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் இனரீதியிலான வெட்டுப்புள்ளி வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக இப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிங்களவர் 105, முஸ்லிம்கள் 120, தமிழர்கள் 130 என்ற அடிப்படையில் வெட்டுப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கவனத்திற்கு கொண்டு...
யாழ். மாநகர சுகாதாரப் பிரிவினரால் வண்ணார்பண்ணைப் பிரதேசத்தில் 34 குடியிருப்பாளர்களின் சுற்றாடலை உடனடியாக துப்பரவு செய்யக் கோரி சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர் வண்ணார்பண்ணை பிரதேசசத்தில் மேற்கொண்ட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 332 வரையிலான வீடுகள் பார்வையிடப்பட்டுள்ளன. ஜே - 97 ஜே - 101 ஆகிய கிராம சேவகர்...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமது ஆதரவினை வழங்கி வருமாகவிருந்தால் எதிர்க்கட்சியிலிருந்து கூட்டமைப்பு விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை...
கைபேசி காணாமற்போனால் அல்லது திருட்டுப் போயிருந்தால் அதுதொடர்பில் உனடியாக முறைப்பாட்டை வழங்கும் வகையில் இலங்கை பொலிஸார் புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். www.ineed.police.lk என்ற புதிய இணையதளமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் அறிவுரைக்கமைய இந்த இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். இணையத்தளத்துக்குள் சென்று முறைப்பாட்டாளர் தனியான கணக்கை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு மனுவொன்றை தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருக்கு மனநலக் கோளாறு உண்டு என்பதை ஆராயுமாறு நீதித் துறையை நாடப்பட்டுள்ளது. மன நலக்கோளாறு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் அத்தியாயத்துக்கு அமைய ஜனாதிபதி...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணை அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகததால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று ஒத்திவைத்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்....
யாழ் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளிற்கும், வாடகை ரக்ஸிகளிற்கும் கட்டண மீற்றர் கட்டாயம் பொருத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி 1ம் திகதியிலிருந்து அறவிடப்பட வேண்டிய கட்டண விபரங்களை யாழ் மாவட்ட செயலகம் அறிவிக்கவுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு உள்ளூராட்சி மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர்,...
யாழ்.மாவட்டத்தில் வழங்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் அரசியல் சிபாரிசுகளை கணக்கில் எடுக்காது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என உறுதி செய்யப்பட்டவர்களுக்கே வீட்டு திட்டம் வழங்கப்படும் . என யாழ் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் அரசியல் கட்சி அலுவலகங்களில் வீட்டுத் திட்டம் தொடர்பில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில்...
போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பிற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவில்லை என்றால், தமிழர்கள் மீண்டும் கொல்லப்படலாம் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் அச்சம் வெளியிட்டுள்ளார். எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உட்பட விடுதலைப் புலி உறுப்பினர் சிலரின் ஆட்கொணர்வு வழக்கு நேற்று (திங்கட்கிழமை) வவுனியா நீதிமன்றில் நடைபெற்றது. நேற்றைய வழக்கு விசாரணைக்கு சென்ற...
சுன்னாகம் பிரதேசத்தில் இயங்கி வந்த உடற்பயிற்சி நிலையம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் பொலிஸ் நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையிலேயநேற்று (திங்கட்கிழமை) மாலை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல்,...
சுன்னாகத்தில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக குடிமனைக்கு நடுவில் உள்ள பொது மக்களின் காணியை சுவீகரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் உடுவில் பிரதேச செயலகம் முன்பாக இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த காலங்களில் கடத்தல், சித்திரவரை மற்றும் கொலை போன்ற மனிதத்துவத்திற்கு எதிரான பல செயற்பாடுகளை முன்னெடுத்த சுன்னாகம்...
இரணைமடு குளத்தில் 1954ம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு இரணைமடு நீர்பாசனத்திட்டத்தின் பொறியியலாளர் எஸ்.சுதாகரனுக்கு வடமாகாண ஆளுனர் பணித்துள்ளார். 1954ம் ஆண்டு இரணைமடு புனரமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோரின் பெயர் பதிக்கப்பட்ட நினைவுக்கல் நிறுவப்பட்டடிருந்தது. இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த...
இலங்கைக்கு தென் கிழக்கே வங்கக்கடலில் உருவாகியுள்ள அதிதீவிர காற்றழுத்த தாழ்வுநிலை வரும் 12ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதிவரையான 5 நாள்களுக்கு இந்தியப் பெருங்கடலில் விரிவடையவுள்ளது. அதனால் இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் கன மழை பொழியும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர் அத்துடன், தாழ்வு மண்டலம் விரிவடைந்தால் சூறாவளியாக மாறவும் வாய்ப்புள்ளது. இலங்கை, தமிழகம்...
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் வான் பாயும் பகுதிக்குள் குளித்துக் கொண்டிருக்கும் போது காணாமல் போன இளைஞன் சில மணி நேரத் தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த என்.டிலக்சன் (வயது-21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 4.30 மணியளவில் இரணைமடுக் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டன. இடது பக்கம் இரண்டு கதவுகளும்,...
தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், குறித்த இரு கட்சிகளும் பேரவையில் தொடர்ந்தும் இருக்கலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள்...
தமிழ் மக்கள் பேரவையில் இருக்கின்ற கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் என சகலரும் ஒருங்கிணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...
யாழ்ப்பாணம் – துன்னாலையில் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரின் தாய் மரணித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகையே (83 -வயது) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மரணித்துள்ளார். இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் மரணித்து ஒரு மாதமே ஆன நிலையில் தற்போது தாயாரும் காலமாகியுள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் இறுதிக்கட்ட...
டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியொருவர், க.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுதிவருகிறார். குறித்த மாணவி நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு வந்து, பரீட்சை எழுதி வருகிறார். யாழ் நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவர் திடீரென டெங்கு நோய்த்தொற்றிற்கு இலக்காகியுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரீட்சைக்கு...
அரசாங்க வேலையில் இணைந்து கொள்ளும் அனைவரும் பின்னர் ஓய்வூதியத்தை எண்ணி பணி புரிவதனால் மக்களுக்கு நல்ல சேவையினை வழங்க முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்- கைதடி பகுதியில் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...
Loading posts...
All posts loaded
No more posts
