Ad Widget

காற்றழுத்த தாழமுக்கத்தின் தாக்கத்தால் 12-16ஆம் திகதிகளில் மழைக்கு வாய்ப்பு

இலங்கைக்கு தென் கிழக்கே வங்கக்கடலில் உருவாகியுள்ள அதிதீவிர காற்றழுத்த தாழ்வுநிலை வரும் 12ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதிவரையான 5 நாள்களுக்கு இந்தியப் பெருங்கடலில் விரிவடையவுள்ளது. அதனால் இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் கன மழை பொழியும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்

அத்துடன், தாழ்வு மண்டலம் விரிவடைந்தால் சூறாவளியாக மாறவும் வாய்ப்புள்ளது. இலங்கை, தமிழகம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் சூறாவளி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

இலங்கைக்கு தென்கிழக்கே வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரிவடைந்து இந்தியா நோக்கி நகரும் என எதிர்பார்ப்பதால் வரும் 12ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் 16ஆம் திகதிவரையான 5 நாள்கள் இந்தியப் பெருங்கடலில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும்.

அதனால் இலங்கையின் வடக்கு- கிழக்கு உள்பட நாட்டின் பல பாகங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக இலங்கை மற்றும் மடகஸ்தாரில் இந்த காற்றழுத்த தாழமுக்கத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கும்” என்று வானிலை ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Posts