நாமல் குமார மற்றும் அமித் வீரசிங்க கைது!

நேற்றும் நேற்று முன்தினமும் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற குழப்பநிலைமைகள் தொடர்பாக, ஊழல் எதிர்ப்பு செயலணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார மற்றும் மஹாசோன் படையணியின் பிரதானி அமித் வீரசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக, காவற்துறை தலைமையக அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த...

வன்செயல்களை தடுக்க பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்கவில்லை! – கூட்டமைப்பு

கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களின் வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள், பள்ளிவாசல்கள் என்பன தாக்குதலுக்குள்ளாவது குறித்து கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஊரடங்குச் சட்ட நேரத்தில் பாதுகாப்புப் படையினர் இந்த வன்செயல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்,...
Ad Widget

யாழ் போதனா வைத்தியசாலையில் நான்கு மாதக் குழந்தைக்கு மாத்திரையை மாற்றிக் கொடுத்த மருந்தாளர்!!

நான்கு மாதக் குழந்தை ஒன்றுக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை விட வேறு மாத்திரைகளை மருத்துவர் மாற்றிக் கொடுத்துள்ளார். எனினும் பெற்றோரின் கவனத்தால் குழந்தை உயிர் தப்பியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்துள்ளது. கிளினிக் சிகிச்சைக்குச் சென்ற 4 மாதக் குழந்தை ஒன்றுக்கு விற்றமின் மாத்திரைக்குப் பதிலாக குருதி அழுத்த நோய்க்கு உபயோகிக்கும்...

சமூக ஊடகங்கள் மீதான தடை தொடர்கிறது ; இன முறுகலை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டால் கடூழியச் சிறை

இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்டத்தை பயன்படுத்தி அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும்...

அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என எச்சரிக்கை!

அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மகால்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மகாகந்தே சுதத்த தேரர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே சிங்கள ராவய...

வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு!

தென்னிலங்கையில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற வன்முறையில் முஸ்லிம் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற கலகத்தின்போது படுகாயமடைந்த 42 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிந்தார். குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான ஏ.எவ்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கும்பல் ஒன்று அவரை கூர்மையான ஆயுதங்களுடன் தாக்கியமை காரணமாகவே...

கண்ட இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்கப்போவதில்லை – இராணுவத்தளபதி

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கண்ட இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்கப்போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எமது விருப்பம். சட்டம், ஒழுங்கை மீறும் வகையில்...

குண்டுத் தாக்குதல்: சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டு உதவி கோரியுள்ளது பொலிஸ்

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டு, மக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். ஈஸ்ட்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். இந்நிலையில் அதன் அடுத்த நாள் கொழும்பு, கொச்சக்கடை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றும் வெடித்து சிதறியது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய...

வலி வடக்கில் யுவதி கடத்தப்பட்டு துஷ்பிரயோகம்!

வலி வடக்கில் 17 வயது யுவதியொருவர் இளைஞர்கள் இருவரால் கடத்தப்பட்டு பாலியல் துர்நடத்தைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கில் உள்ள பகுதியொன்றில் வசிக்கும் யுவதி நேற்று மாலை, வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள பிரதேசமொன்றிற்கு சென்றுள்ளார். மாலையில் திரும்பி வரும்போது அவரை வழிமறித்த இரண்டு இளைஞர்கள், அவரை கடத்திச் சென்று துர்நடத்தைக்கு...

மேலும் இரு பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்!

மேலும் இரு பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். அதன்படி ரஸ்நாயக்கபுர மற்றும் கொபேகன ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஊரடங்குச் சட்டமானது நாளை அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

றிஷாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிடம் கோரிக்கை

அமைச்சர் றிஷாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது, மாகல்கந்தே சுதந்த தேரர்,...

வவுனியாவில் பாதுகாப்பு தீவிரம்!- தனியார் வாகனங்கள் உள்நுழைய தடை

வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் வாகனங்கள் உட்செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களிலும் இன்று (திங்கட்கிழமை) தாக்குதல்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில், வவுனியா நகரின் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்...

பாடசாலைகள், ஹோட்டல்களின் வரைபடங்கள் மற்றும் குண்டுகளுடன் பெண் கைது!

பாடசாலைகள், ஹோட்டல்களின் வரைபடங்கள், ஆா்.பி.ஜி மற்றும் மோட்டாா் குண்டுகளின் பாகங்களை வைத்திருந்த பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளாா். தம்புள்ளை- மடாடுகம பகுதியில் பொலிஸாா் மற்றும் படையினா் இணைந்து நடாத்திய சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யும் போது குறித்த பெண்ணிடம், RPG தோட்டாக்களுக்கு...

படையினரின் துணையுடன் பாடசாலைகள் ஆரம்பம் – மாணவர்களின் வருகையில் கடும் வீழ்ச்சி

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பாடசாலை நடவடிக்கைகள் தற்போது வழமைக்கு திரும்பி வருகிறது. அந்தவகையில் இரண்டாம் தவணைக்கான ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என உளவுத்துறை தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், பின்னர் தாக்குதல் அச்சுறுத்தல் நீக்கப்பட்டிருந்த...

குடாநாட்டைக் கலக்கிய கொள்ளைக் கும்பல் சிக்கியது!

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய 6 பேர் கொண்ட கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேரும் அரியாலை பூம்புகார் பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 33 தங்கப் பவுண் நகைகளும் 3 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன” என்று பொலிஸார் குறிப்பிட்டனர். “யாழ்ப்பாணக்...

குருணாகலில் 3 பள்ளிவாசல்கள் மீது இன்று அதிகாலை தாக்குதல்

குருணாகல் மாவட்டத்தில் மூன்று பள்ளிவாசல்கள் மீது இன்று (13) திங்கட்கிழமை காலை இனந்தெரியாதோரால் தாக்குதல்கள் நடப்பட்டுள்ளன. கின்னியம மஸ்ஜிதுல் தக்வா ஜும்மா பள்ளிவாசல் , மஸ்ஜிதுல் அப்ரார் தக்கியா பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் ஆயிஷா தக்கியா பள்ளிவாசல் ஆகியவை மீதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியோர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, சிலாபத்தில்...

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாதைகள்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை ஊழியரின் விடுதலையை வலியுறுத்தி பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தைச் சுற்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (11.05.19) இவ்வாறு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அவர்களின் விடுதலையை வலியுறுத்தியே இவ்வாறு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பதாதைகளில் வீணே சிறையிருக்கும் எம் மாணவர்களையும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் விடுதலை செய்து நாட்கள்...

சாவகச்சேரி குப்பை மேட்டில் பாரிய தீ

தென்மராட்சி - சாவகச்சேரி நகராச்சி மன்ற குப்பை மேட்டில் நேற்றிரவு 10.30 மணியளவில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரதேச இளைஞர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் சிலர் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதனால் தீப்பரவலானது அதிகாலை 1.30 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தென்னிலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்தியபோதும் பாடசாலைகள் இடம்பெற்றது – சிவாஜிலிங்கம்

தென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடந்தபோதும் பாடசாலைகள் இடம்பெற்றது என முன்னாள் வட மாகணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் கச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாகநேற்று மாலை சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களளுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்....

மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சிலாபம் மற்றும் குளியாபிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் சில அசாதாரண சம்பவங்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவாகின. அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவியமையால் பொலிஸ் ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி, நாட்டில்...
Loading posts...

All posts loaded

No more posts