Ad Widget

நாமல் குமார மற்றும் அமித் வீரசிங்க கைது!

நேற்றும் நேற்று முன்தினமும் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற குழப்பநிலைமைகள் தொடர்பாக, ஊழல் எதிர்ப்பு செயலணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார மற்றும் மஹாசோன் படையணியின் பிரதானி அமித் வீரசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக, காவற்துறை தலைமையக அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட காவற்துறை குழுவினாலேயே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்காக வரகாபொல காவற்துறை நிலையத்திற்கு பிரவேசித்த போது, நாமல் குமார கைது செய்யப்பட்டார்.

அதேநேரம், தெல்தெனியவில் வைத்து அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அமித் வீரசிங்க, கடந்த ஆண்டு தெல்தெனிய மற்றும் திகன பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் இருந்த நிலையில், 7 மாதங்களின் பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts