தென்மராட்சி – சாவகச்சேரி நகராச்சி மன்ற குப்பை மேட்டில் நேற்றிரவு 10.30 மணியளவில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதேச இளைஞர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் சிலர் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதனால் தீப்பரவலானது அதிகாலை 1.30 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.