Ad Widget

தென்னிலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்தியபோதும் பாடசாலைகள் இடம்பெற்றது – சிவாஜிலிங்கம்

தென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடந்தபோதும் பாடசாலைகள் இடம்பெற்றது என முன்னாள் வட மாகணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் கச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாகநேற்று மாலை சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களளுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது விமானத்தாக்குதல் செல் தாக்குதல் என்பன நடந்தாலும் வடக்கு கிழக்கிலே மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார்கள்.

தென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள், விமானத்தாக்குதல்கள் போன்ற தாக்குதல்களுக்கு மத்தியிலும் பாடசாலை நடைபெற்றது.

ஆனால் இப்போது அரசியல் ரீதியான ஒரு விசமத்தனமான பிரச்சாரம் காரணமாகத்தான் பாடசாலைக்கு மாணவர்கள் செல்லவில்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. ஆகவே இந்த வாரத்திலே அதற்கான நிலைமைகள் முன்னேற்றமடையும்.

இருந்தாலும் பல்கலைக்கழக மாணவர்களின் கைது போன்றன பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களையும் விடுதலை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மக்கள் தன்னெழுச்சியாக பல்லாயிரக்கணக்காக ஒன்று திரழ்வார்கள் திரழ வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.” என கூறினார்.

Related Posts