- Friday
- May 8th, 2026
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபைக்கு முன்பாக அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற நிலையிலேயே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் முன்பாக...
தென்னிந்தியப் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வவுனியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.அங்கு அவர் வவுனியா பறண்நட்டகல் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை கண் வைத்தியசாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். லண்டன் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பின் ஸ்தாபகர் வேலாயுதம் சர்வேஸ்வரனின் தலைமையில் 150 மில்லியன் ரூபாய் நிதியில் இந்த கண் வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த அதன் நிறுவுனர்...
பலாலி இராணுவ முகாமின் இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த படைச் சிப்பாய் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்தார். சிப்பாய் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பலாலி இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த படைச் சிப்பாய் மீது முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும்...
யாழ்ப்பாணம் நகரில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளம் பெண்ணிடமிருந்து பெறுமதி வாய்ந்த அலைபேசியுடன் கைப்பையைப் பறித்துச் சென்ற நபர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையிடப்பட்ட அலைபேசி மற்றும் கைப்பை என்பன அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. கொள்ளையிட்ட நபர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்....
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் நிதியை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 500 ரூபாய் கொடுப்பனவு 750 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசிலை அதிகரிக்கும் யோசனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வருடாந்தம் 1,30,000 மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுகின்றனர் என்பது...
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் வடக்கின் குரலிசை 2019 தேர்வு நடைபெறவுள்ளது. இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் வடமாகாண இளைஞர் யுவதிகளை ஊக்குவிக்கும் முகமாக ஆளுநரின் எண்ணக்கருவில் நடைபெறவுள்ள இந்த குரலிசை தேர்வில் வயது 15 இற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்...
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் உள்ள வங்கி இயந்திரத்தில் களவாட முற்பட்ட 6 பேர் நேற்றைய தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியில் இலங்கை வங்கிக்கு சொந்தமான தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தை உடைத்து களவாட முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறித்த 6 பேரும் நேற்றைய தினம் முழங்காவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்....
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள எண்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சிக்கான ஆரம்பப் பணிகளுக்கு சுமார் 60 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எண்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சியின் மூன்றாவது தேசிய நிகழ்வு யாழ்ப்பாணத்தில் செப்ரெம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெறும்...
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்ரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்கள் இந்து மாயனத்தில் புதைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றின் உத்தரவில் அவை நேற்று தோண்டி எடுக்கப்பட்டன. ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் உடல் பாகங்கள் நீதிமன்ற...
கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அண்மையாகவுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கிருந்த தளபாடங்கள் மற்றும் உடமைகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. “4 மோட்டார் சைக்கிள்களில் 10 பேர் கொண்ட கும்பல் முகத்தை கறுத்தத் துணியால்...
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், தமது இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். வவுனியா மாவட்டத்தில் செயற்பட்டு வரும் ஈழமக்கள் ஜனநாயக...
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றமுன்தினம்(31) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கௌரவ ஆளுநர் தெரிவிக்கையில், ஆரம்பகால கல்வி என்பது மிகவும் முக்கியமானது. விழுந்திருக்கின்ற இந்த தேசத்தின், விளிம்பிலே...
பல்கலைக்கழக மாணவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்குவோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சித்திரவதைக்கு உட்படுத்தும் அல்லது அவ்வாறான செயற்பாட்டுடன் தொடர்புபடும் மாணவர்களையும், இந்தச் செயற்பாட்டிற்கு ஒத்தாசை வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் யாராக...
யாழ்ப்பாண மாவட்டத்தில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தின் அடிப்படையில் யாழ்....
வடமராட்சி – ஹப்புத்துவெளி, அந்தணத்திடலில் நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்துள்ளார். 6×10 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் 2000 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நன்னீர் திட்டம் அமைக்கப்படவுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் பழைய கச்சேரிக்கு அண்மையில் அமைக்கப்பட்ட ஸ்மாட் ஸ்ரீலங்கா கட்டடத்தையும் கைதடியில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினையும்...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஒருநாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தின முதல் நிகழ்வாக, விவசாயம், நீரியல் வளத்துறை அமைச்சு மற்றும் ஆசிய...
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உரிய நீதியை அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி உறவுகள் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. வவுனியா- பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு தேங்காய் உடைத்து...
யாழ்ப்பாணம் வருவதற்க்காக திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணொருவர் அணிந்திருந்த சேலையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் பகல் வேளை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலையை அணிந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் வருவதற்க்கா திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். இந்த...
திருமணம் நடைபெற்ற அன்றே வீடு புகுந்து, மணமகளின் தாலிக்கொடி உள்ளிட்ட 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் திருடர்கள். அதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை கொண்டு வந்த திருடர்கள், அந்த படத்தில் உள்ள நகைகள் எங்கே என விசாரணை செய்து, அனைத்து நகைகளையும் அள்ளி சென்றுள்ளனர். மானிப்பாய் கொத்துக்கலட்டி பகுதியில்...
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவர் சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில், இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். “சின்னமணி டனீஸ்வரன், இரத்தினம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னத்துரை, விநாயகமூர்த்தி நிஜிலன் ஆகிய நால்வரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று ரி. நிர்மலராஜ், ரூபன் ஜேசுதாசன்...
Loading posts...
All posts loaded
No more posts
