Ad Widget

மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.

‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஒருநாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின முதல் நிகழ்வாக, விவசாயம், நீரியல் வளத்துறை அமைச்சு மற்றும் ஆசிய வங்கியின் 13 ஆயிரத்து 500 பில்லியன் ரூபாய் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகத்திற்கான பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்ததுடன், அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

இந்த நிகழ்வில், விவசாயம் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ஹரிசன் பெர்ணான்டோ மற்றும் வட.மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ சுமந்திரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமாநாதன், மஸ்தான் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், நீரியல்வளத்துறை அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts