வடமராட்சி – ஹப்புத்துவெளி, அந்தணத்திடலில் நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்துள்ளார்.

6×10 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் 2000 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நன்னீர் திட்டம் அமைக்கப்படவுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் பழைய கச்சேரிக்கு அண்மையில் அமைக்கப்பட்ட ஸ்மாட் ஸ்ரீலங்கா கட்டடத்தையும் கைதடியில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினையும் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வுகளில் விவசாயம் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ஹரிசன் பெர்ணான்டோ மற்றும் வட.மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமாநாதன், மஸ்தான் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், நீரியல்வளத்துறை அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.