கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அண்மையாகவுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கிருந்த தளபாடங்கள் மற்றும் உடமைகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது.
“4 மோட்டார் சைக்கிள்களில் 10 பேர் கொண்ட கும்பல் முகத்தை கறுத்தத் துணியால் கட்டியவாறு வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் கைகளில் வாள்கள், கத்திகள் மற்றும் கம்பிகள் காணப்பட்டன.
வீட்டுக்குள் புகுந்து தளபாடங்களை அடித்து சேதப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த உடமைகளை நாசமாக்கினர். வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு கும்பல் தப்பித்தது” என்று யாழ்ப்பாணம் பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.