- Friday
- May 1st, 2026
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பயங்கரவாத அமைப்பை நினைவுகூராமலும், கொரோனா விதிமுறைகளை மீறாமலும் நினைவேந்தலை நடத்தலாமென முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பொலிசார் தாக்கல் செய்த தடை மனுவை இரத்து செய்யக் கோரி, இன்று தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்த உறவுகளுக்காக எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு இன்று (திங்கட்கிழமை) சென்று உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் 'முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின்' 12ஆம் ஆண்டு நினைவேந்தல் உலகெங்கிலும் நாளை செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை உடன் இரத்துச் செய்யுமாறு கோரி இன்று திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தலில் கலந்துகொள்வதைத்...
யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார். இந்த நிலையில் தாய்க்கு தொடர்ந்து வைத்தியர்களின் விசேட...
வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 642 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒன்பது பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேருக்கும் கிளிநொச்சியில் எட்டுப் பேருக்கும்...
நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒவ்வொருநாளும் இரவு 11 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்குமென இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தேசிய...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 21 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு...
15.05.2021 சனிக்கிழமை இன்று வட மாகாணத்தில் 661 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. * இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 44 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. * யாழ் மாவட்டம்-25 * முல்லைத்தீவு மாவட்டம் -3 * கிளிநொச்சி மாவட்டம் -4 * வவுனியா மாவட்டம் -10 *மன்னார் மாவட்டம் -2
சவுதி அரேபிய கடற்பரப்பில் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக இலங்கைகை்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் இந்தத் தாக்கம் தீவிரம் பெற்று இலங்கையின் வடபகுதியைக் கடக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாளை முதல் இந்தத் தாழமுக்கம் மேலும் தீவிரமடையலாம் என்றும் தீவிரம் பெற்ற சூறாவளி இலங்கையின் வடமேல்...
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக மாகாண சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள புதிய விடுதிகள், அதி தீவிர சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை, ஒட்சிசன் தேவைப்படுவோருக்கு சிகிச்சை வழங்குவதற்கும் கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்படும்போது விசேட சிகிச்சை வழங்குவதற்கும் தயார்படுத்தப்பட்டுள்ளன....
இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்....
நாட்டில் தற்போதுள்ள கொவிட்-19 பரவல் தீவிர நிலைமையைக் கருத்திற் கொண்டு விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நாடளாவிய ரீதியில் முழுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகளும், நேற்று புதன்கிழமை முதல் மே 31 ஆம் திகதி வரை இரவு நேர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை இரவு 11 மணி...
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் நுழைந்து யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் அரிச்சலூர் இடைத்தங்கல் முகாமில் வசித்து வந்த வயோதிப பெண், அவரது பிள்ளையும் மற்றும் அவரது இரு பேரக்குழந்தைகள் ஆகிய நால்வரும் படகு மூலம் நாட்டுக்குள் நுழைந்து குருநகர் பகுதியில்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கல்வி பயின்றுவரும் 31 மாணவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பம்பைமடுவில் அமைந்துள்ள குறித்த வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதியில் நேற்று (புதன்கிழமை) சுகாதாரப் பிரிவினரால் அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவுகளின்படி, அங்கு தங்கியுள்ள 31 மாணவர்ககுக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த மாணவர்க்ள அனைவரும் தென்பகுதியைச்...
யாழ்ப்பாணம் மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நெருக்கடி நிலையில், முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளி பேணாதவர்களைக் கைதுசெய்து...
வடக்கு மாகாணத்தில் மேலும் 82 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம் ஆகியவற்றில் 977 பேரின் மாதிரிகள் நேற்று (புதன்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 67 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில்...
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் , நினைவு தூபி உடைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இம்முறை புதிதாக நாட்டுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த 6.5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பொது நினைவுக்கல்லும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமான நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு...
முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி உட்பட ஏனைய பாதைகளில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை முள்ளிவாய்க்கால் கிராமத்துக்கு பயணிப்போரை வேறு பாதையொன்றினை பயன்படுத்துமாறு இராணுவத்தினர் வலியுறுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடுகை செய்வதற்காக நேற்று (புதன்கிழமை) பொது நினைவுக்கல் ஒன்று...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று (புதன்கிழமை) நினைவேந்தல் அஞ்சலி சுடரேற்றி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த நினைவேந்தல் ஆரம்ப நாள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள்...
வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களிற்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர்களில் நால்வருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, குறித்த வைத்தியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதுடன், தொற்று...
Loading posts...
All posts loaded
No more posts
