Ad Widget

யாழ். நகரைச் சுற்றிவளைத்த பொலிஸார்: 50 பேர் கைது!

யாழ்ப்பாணம் மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நெருக்கடி நிலையில், முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளி பேணாதவர்களைக் கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது,

இதன்படி, யாழ்ப்பாணத் தலைமையகப் பொலிஸ் குழுவினரால் யாழ். மாநகரில் நேறடறு (புதன்கிழமை) விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வீதிகளில் மட்டுமன்றி நிறுவனங்கள், வியாபார நிலையங்களுக்குள்ளும் சென்ற பொலிஸார், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக 50 பேரைக் கைதுசெய்து பேருந்தில் ஏற்றி யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், குறித்த 50 பேருக்கு எதிராக யாழ். நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் அழைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts