- Wednesday
- April 29th, 2026
இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதேவேளை யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக் கழகளத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நேற்று பிற்பகலில் இருந்து இராணுவம், பொலிஸ் மற்றும்...
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதேவேளை முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல்...
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். முல்லைத்தீவு நந்திக் கடலோரத்தில் குறித்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதி முதல்வர் து.ஈசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு, இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து உரை நிகழ்த்திய முதல்வர், “உயிரிழந்த எமது உறவுகளுக்கு செலுத்தும்...
மே-18 தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளில் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், அரசாங்கத்தின் இழிச் செயலுக்கு வரலாறு பதில் சொல்லும் என மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “மே-18 தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு...
இலங்கையில் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார். இருப்பினும் இந்த இரண்டு நாட்கள் தனியார் துறை மற்றும் வங்கி விடுமுறை நாட்களாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 21ஆம் திகதி முதல் நாடளாவிய...
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இறந்ததை நினைவுப் படுத்தியிருந்தார். இந்த நிலையில், பிரதமரின் உரையை அடுத்து அதற்கு பதில் வழங்கும்படியாக கருத்து வெளியிடும்போதே எம்.ஏ.சுமந்திரன்...
பருத்தித்துறை மீன் சந்தை சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலில் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் மூடப்பட்டுள்ளது. நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக சந்தைகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
21 ஆம் திகதி 11 மணிமுதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். மீண்டும் 25 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இதேவேளை...
முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கு மாகாணத்தில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை இதுவேயாகும். யாழ். போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட...
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முள்ளிவாய்க்கால் உள்ளடங்களான முல்லைத்தீவு மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில், நினைவேந்தலை நடத்த முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதேவேளை முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இறுதிப் போரில்...
இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து வுவுனியாவில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு, இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது. வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அந்தணர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் ஆலயத்தின் பிரதம குருவான பிரபாகரக்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் அடையாள அட்டை பரிசோதனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமையவே இன்று முதல் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அடையாள அட்டையின் இறுதி...
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இந்து பண்பாட்டு நிதியத்திற்கான உறுப்பினர்களை இன்று (17) நியமித்தார். இந்து சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதற்காக இலங்கை பாராளுமன்றத்தின் 1985 ஆம் ஆண்டு 31 ஆம் இலக்க சட்டம் மூலமாக இந்து பண்பாட்டு நிதியம்...
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழர்கள் அனைவரும் தொலைகாணொளி ஊடாக அதாவது Zoom வழியாக அனுஷ்டிப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று (திங்கட்கிழமை) தனது முகப்புத்தகத்தில் காணொளியொன்றைப் பதிவிட்டுள்ளார். குறித்த காணொளியில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டில் தொடர்ந்து...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பயங்கரவாத அமைப்பை நினைவுகூராமலும், கொரோனா விதிமுறைகளை மீறாமலும் நினைவேந்தலை நடத்தலாமென முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பொலிசார் தாக்கல் செய்த தடை மனுவை இரத்து செய்யக் கோரி, இன்று தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்த உறவுகளுக்காக எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு இன்று (திங்கட்கிழமை) சென்று உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் 'முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின்' 12ஆம் ஆண்டு நினைவேந்தல் உலகெங்கிலும் நாளை செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை உடன் இரத்துச் செய்யுமாறு கோரி இன்று திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தலில் கலந்துகொள்வதைத்...
யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார். இந்த நிலையில் தாய்க்கு தொடர்ந்து வைத்தியர்களின் விசேட...
வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 642 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒன்பது பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேருக்கும் கிளிநொச்சியில் எட்டுப் பேருக்கும்...
Loading posts...
All posts loaded
No more posts
