Ad Widget

24 மற்றும் 25ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த இரண்டு நாட்கள் தனியார் துறை மற்றும் வங்கி விடுமுறை நாட்களாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 21ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 25ம் திகதி அதிகாலை 04 மணிக்கு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மீண்டும் அதேநாள் இரவு 11 மணிக்கு நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts