Ad Widget

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்!

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார்.

இந்த நிலையில் தாய்க்கு தொடர்ந்து வைத்தியர்களின் விசேட கண்காணிப்புடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதேநேரம், பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் தாய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ள நிலையில், நேற்றைய தினம் தனது இரட்டை குழந்தைகளுடன் அவர் வீடு திரும்பியுள்ளார்.

Related Posts