- Monday
- April 27th, 2026
யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜின் பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து, புதிய பீடாதிக்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. இதன்போது மருத்து பீட, பீடச் சபை உறுப்பினர்களுடையியே இடம்பெற்ற வாக்கெடுப்பில் வைத்தியக் கலாநிதி...
கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைத்து தருமாறு, கொக்குவில் இந்து மயான அபிவிருத்தி சபையினால் நல்லூர் பிரதேச சபையிடம் கோரப்பட்டது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) நல்லூர்...
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மருத்துவ பீடத்தை சேர்ந்த சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை. சுன்னாகத்தினைச்...
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் சுகயீனம் காரணமாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்று...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொ்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 152ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 157 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான நால்வரும் 60 வயதுக்கு குறைவான 23 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 110 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து...
யாழ்ப்பாணம் காரைநகரில் ஊரடங்கு வேளை பந்தல் அமைத்து நூறுக்கும் அதிகமானோர் பங்குகொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் குறித்த தொற்றாளர்கள் யார் என்று, காரைநகர் சுகாதாரத் தரப்பினரைத் தொடர்புகொண்டு...
ஊரடங்கு உத்தரவை நீக்கியவுடன் பாடசாலைகளை விரைவில் திறப்பது அவசியமானது என கொழும்பு மருத்துவ பீடத்தின் குழந்தை மருத்துவப் பேராசிரியர், மருத்துவ வல்லுநர் பூஜித விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். “இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம்....
இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கோவிட்-19 நோயினால் பரிதாபமாக உயிரிழந்தார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணே இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். குழந்தைகள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். “கடந்த 4ஆம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அன்றைய தினம் தெல்லிப்பழை...
செப்டம்பர் 21 க்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டுமானால், எந்த வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்திலேயே ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்தார் என இராணுவத் தளபதி...
யாழ்ப்பாணம்- தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1 வயதான குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் குறித்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. தெல்லிப்பழை பொியபுலம் பகுதியை சேர்ந்த 1 வயதான குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் காரைநகரைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் வேம்படியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண்...
நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி இல்லை என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “கடந்த காலங்களில் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி போடப்படாத நபர்களாகும்.மேலும் அதிகமான தனிநபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதால், உயிரிழந்தவர்களில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் அதிகமாக இருப்பதையும் சேர்த்தனர். எனினும் எதிர்காலத்தில் வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கிறோம். வெளிநாடுகளுக்கு...
12-18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு விரைவில் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர், கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கோவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக, பாடசாலைகள் அவ்வப்போது சுமார் ஒன்றரை வருடங்கள் மூடப்பட வேண்டியிருந்தது. அதனால் மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் கூறினார். இன்று (09) சுகாதார...
உடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதை அடுத்து பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோயில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாட்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த மோதலில்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுது. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 கீழ் 1 தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் எனவே...
தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை அரசாங்கத்தினால் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார். யாழிற்கு இன்றைய தினம் (வியாழக்கிழமை) விஜயம் செய்துள்ள அவர், அபிவிருத்தி...
அந்நிய செலாவணி விகிதத்தைப் பாதுகாக்கும் முகமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கைத்தொலைபேசி, தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். அத்தோடு பானங்கள், பழங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், பியர்,...
கோவிட்-19 வைரஸின் டெல்டா திரிபு பரவுவதால் பெண்கள் முடிந்தால் ஒரு வருடத்திற்கு கர்ப்பத்தை தாமதப்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பெண்கள் மருத்துவ வல்லுநர் ஹர்ஷா அத்தப்பத்து வலியுறுத்தினார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். கோவிட்-19 டெல்டா திரிபு பரவுவதால் தாய் மற்றும் சேயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர்...
எதிர்வரும் 16,17. மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அடுத்தமாதம் 7,8,9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப்பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணம் பல்கலைக்கழக...
தமிழரின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அன்று கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டம் தற்போது சிங்களவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிங்கள காலனித்துவ ஆதிக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயகம் மற்றும்...
Loading posts...
All posts loaded
No more posts
