- Monday
- April 27th, 2026
தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று மரணித்த ஊடகவியலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் கடந்த 2 ஆம் திகதி மரணமடைந்ததை தொடர்ந்து யாழ். தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டியிலுள்ள அவரது வீடு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. தமிழ் பேசும் பல்வேறு தரப்பினரிடையேயும் குறித்த ஊடகவியலாளரின்...
பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகள் தமக்கு வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருக்குமாயின் அதனை உரிய பகுதியினரின் கவனத்திற்கு கொண்டு வருமாறு அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 53,000 பட்டதாரிகள் எதிர்வரும் மூன்று மாதங்களில் அரச நிறுவனங்களுக்கு இணைக்கப்பட உள்ளார்கள். இந்தப்...
இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உணவு ஒறுப்பிலிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக ஆரம்பமானது. 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த தியாக தீபம் திலீபன், 11ஆவது...
அநுராதபுரம் சிறைகளுக்குச் சென்ற சிறைச்சாலைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து இராஜாங்க அமைச்சர் அவர்களில் இருவரை தனக்கு முன்பாக மண்டியிடச் செய்தார் என்றும் அவர்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டி அந்த இடத்திலேயே கொன்றுவிடுவேன் என மிரட்டினார்...
அச்சுவேலியில் வன்முறை கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பம், பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளது. அச்சுவேலி மேற்கு, ஜோன்ராஜா வீதியில் கைக்குழந்தையுடன் வசித்து வரும் இளம் தம்பதியினரின் வீட்டினுள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணியளவில் மூவர் அடங்கிய கும்பல் ஒன்று...
கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்தது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இதற்கு முன்னரும் இலங்கையில் கறுப்பு பூஞ்சை நோயுடன்...
அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் மேற்கொண்டதாக கூறப்படும் செயல் உண்மையெனில் அது கண்டிக்கப்படவேண்டியதென யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) மதியம் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம், 08 ஆம், 09 ஆந் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. நாட்டில் இப்போதுள்ள கோரோனா – தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைகள் நீடிக்குமாயின், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதனை நிகழ்நிலையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள்...
இணையவழிக் கல்வி முறை மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கல்வி வகுப்புகளுக்கு அனுமதிக்கும் போது நடக்கும் நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முடித விதானபத்திரண தெரிவித்துள்ளதாவது; இணையவழிக் கற்பித்தலில் சிறுவர்கள் துர்நடத்தைக்கு உள்படுத்தப்படுவதாக பல தகவல்கள்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நீங்க வேண்டி யாழ்ப்பாணத்தில் சிறப்பு யாக பூஜையொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இலங்கையிலுள்ள நான்கு கிருஷ்ணன் ஆலயங்களில் இவ்வாறான பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில், இன்று விசேட யாக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பொன்னாலை வரதராஜப் பெருமான் ஆலய பிரதம குருக்கள்,...
பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை நீடிப்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை குறிப்பிட்டுள்ளார். பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீடிப்பதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 53 ஆயிரம்...
நாட்டில் தற்போது அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த வாரம் முதல் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்து பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி வழங்கல் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்...
பிள்ளையார் ஆலய குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம், பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம் என தன்னிடம் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி...
கொரோனா தொற்று காலத்தில் அவசர சேவைக்காக மட்டும் கிளை அலுவலகங்கள் வரையறுக்கப்பட்ட நாட்களுக்கு திறந்திருக்கும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி வவுனியா, மாத்தறை கண்டி மற்றும் குருநாகல் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த அலுவலகங்கள் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்காக...
வடமாகாணத்தின் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 100,000 பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுவரை வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 547,150 பேருக்கு 1வது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – இது வடமாகாணத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதமாகும். 2வது தடுப்பூசி 401,494...
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் பொருட்களின் விலை குறையாது. குறைக்கவும் முடியாது. மக்கள் தற்காலிக நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க பழகிக்கொள்ள வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எந்த நேரத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும், எப்போது மருந்து தட்டுப்பாடு ஏற்படும்...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 1ஆம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்.வைத்தியாலையில் அவர் அனுமதிக்கப்ப்டார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதனைத்...
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அனுப்பிய கடிதத்தில் விடுதலைப் புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என எங்கேயும் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். மேலும் சுயாதீன விசாரணை பொறிமுறையை மேற்கொள்ள வேண்டும் என்பதையே...
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய முகாமையாளர் பதவிக்கு, அநுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய முகாமையாளர் பதவி வெற்றிடமாக இருந்தது. இந்நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான தகுதி, கிளிநொச்சி மற்றும் கோண்டாவில் சாலையில் கடமை புரியும் பொறியியலாளர்களிற்கு இருப்பதாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனாலும், திருகோணமலையில் கடமையாற்றிய குறித்த...
200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணியுடன் இணைந்த இந்தக் குழுவால் எட்டப்பட்ட பரிந்துரைகள் செப்டம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புறங்களில் உள்ள சுமார் 3,000 பாடசாலைகளை ஆரம்பத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
